உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 09, 2026 02:03 AM

அ நிறம் | அளவு
தொடர்ந்து மூன்று நாட்களாக சரிந்துள்ள 'பேங்க் நிப்டி' குறியீடு, நேற்று 57,000க்கு கீழே இறங்கி 56,777 புள்ளிகளில் நிலைபெற்றது. 'ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்.டி.எப்.சி., பேங்க்' ஆகிய முன்னணி வங்கி துறை பங்குகள் 1 சதவீதத்துக்கு மேல் இறங்கியுள்ளன.
டெக்னிக்கலாக பேங்க் நிப்டி முக்கிய ஆதரவு நிலையில் முடிவடைந்துள்ளது. மேலும், 20 மற்றும் 200 நாள் சராசரிகளுக்கு (டி.எம்.ஏ.,) கீழே இறங்கியுள்ளது. அடுத்தகட்டமாக, 56,500 - 56,200 லெவல்கள் முக்கிய ஆதரவு பகுதியாக உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
காரணங்கள் கடன் பத்திரங்களின் சரிவால், வங்கிகளின் பத்திர வர்த்தக வருமானம் பாதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு
கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்க அழுத்தம் அதிகரிக்கும் என்ற அச்சம்.
