sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

ஆயிரம் சந்தேகங்கள்

/

ஆயிரம் சந்தேகங்கள் : மருத்துவ காப்பீடு எடுத்ததும் அமலுக்கு வருமா?

/

ஆயிரம் சந்தேகங்கள் : மருத்துவ காப்பீடு எடுத்ததும் அமலுக்கு வருமா?

ஆயிரம் சந்தேகங்கள் : மருத்துவ காப்பீடு எடுத்ததும் அமலுக்கு வருமா?

ஆயிரம் சந்தேகங்கள் : மருத்துவ காப்பீடு எடுத்ததும் அமலுக்கு வருமா?


ADDED : ஜூலை 13, 2025 11:05 PM

Google News

ADDED : ஜூலை 13, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தனியார் கம்பெனியில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றுகிறேன். பி.எப்., வசதி இல்லை. 42 வயது. 60 வயதுக்குப் பின்னர் ஓய்வூதியம் பெற திட்டமிடுகிறேன். எஸ்.ஐ.பி., மூலமாக மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்துவிட்டு, 60 வயதுக்குப் பின் எஸ்.டபிள்யு.பி. முறையில் ஓய்வூதியம் பெறுவது சரியா? அல்லது என்.பி.எஸ்., போன்று வேறு ஏதேனும் திட்டங்கள் சரியா?

விஜய், கரூர்.

மியூச்சுவல் பண்டு திட்டத்தின் எஸ்.ஐ.பி., என்.பி.எஸ். ஆகிய இரண்டிலும் பணம் போட்டு வாருங்கள். 60 வயதுக்குள் நிச்சயம் கணிசமான சேமிப்பு உருவாகியிருக்கும். மேலும் உங்களுக்கு, குறைந்த வயது தான். அதனால் கொஞ்சம் துணிச்சலாக பங்குகளில் முதலீடு செய்ய முடியுமா என்று பாருங்கள்.

முதல் தரமான நிறுவனங்களாகப் பார்த்து, சிறுகச் சிறுக முதலீடு செய்து வாருங்கள். நீங்கள் ஓய்வுபெற இன்னும் 18 ஆண்டுகள் இருப்பதால், பங்குச் சந்தை என்ன தள்ளாட்டத்துடன் இருந்தாலும், வருங்காலத்தில் மிக நல்ல வருவாயையே ஈட்டித் தரும்.

இன்னும் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கும் துணிவு இருந்தால், ஏதேனும் சிறிய தொழில் ஒன்றை ஆரம்பியுங்கள் அல்லது நண்பர்களின் நிறுவனங்களில் பங்குதாரராக சேருங்கள். அடுத்த 20, 25 ஆண்டுகளில் நமது நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, தொழில், உற்பத்தி பெருக்கமும் நடைபெறும். தொழிலும் வளர்ச்சி அடையும்.

லிக்விட் பண்டில் பணம் போடவும், எடுக்கவும் முகவர் இல்லாமல் செய்ய முடியுமா? முடியும் என்றால், அதற்கான வழிமுறைகள் என்ன?

டி. அனுசூயா, மின்னஞ்சல்.

பல பண்டு நிறுவனங்கள் லிக்விட் பண்டு திட்டங்களை வழங்குகின்றன. முதலில் எந்தத் திட்டம் உங்களுக்கு உகந்தது என்பதை கொஞ்சம் ஆய்வு செய்து முடிவுக்கு வாருங்கள். எல்லா மியூச்சுவல் பண்டுகளுமே தத்தமது வலைதளத்தின் மூலமாக முதலீடு செய்வதற்கான வாய்ப்பையும் வசதியையும் செய்து கொடுத்து உள்ளன.

நீங்கள் தேர்வு செய்துள்ள பண்டு திட்டத்தை வழங்கும் மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் வலைதளத்துக்குப் போய், உங்கள் 'பான்' எண்ணை குறிப்பிட்டு, பதிவு செய்துகொண்டு உள்ளே நுழையுங்கள்.

அதன் பிறகு முதலீடு செய்வது எளிதாகிவிடும். 'ரீடீம்' செய்வதற்கும் இணைய வழியையே பின்பற்றலாம். எங்கேயும் முகவர் தேவைப்பட மாட்டார்.

எஸ்.ஐ.பி., மூலமாக கடந்த 3 ஆண்டுகளாக, 5 லட்சம் ரூபாய் வரை மியூச்சுவல் பண்டு திட்டத்தில் முதலீடு செய்துள்ளேன். இப்போது ஒரு மருத்துவ செலவு வருகிறது. இந்தப் பணத்தை எடுக்க வேண்டும். என்ன வழிமுறை?

கே. சந்திரசேகரன், சென்னை.

முகவர் மூலமாக எஸ்.ஐ.பி.யைத் தொடங்கியிருந்தால், அவரை அணுகுங்கள். யூனிட்டுகளை ரீடீம் செய்வதற்கான படிவத்தை பூர்த்தி செய்துகொடுத்தால், அடுத்த சில நாட்களில் உங்கள் பணம், உங்கள் வங்கிக் கணக்குக்கு வந்து சேர்ந்துவிடும். இணையம் மூலமாகவே நீங்கள் முதலீடு செய்து வருகிறீர்கள் என்றால், இது இன்னும் சுலபம்.

குறிப்பிட்ட மியூச்சுவல் பண்டின் வலைதளத்துக்குச் சென்றோ, அல்லது நீங்கள் முதலீடு செய்யப் பயன்படுத்தும் நிறுவன வலைதளம் / மொபைல் செயலி ஆகியவற்றுக்கு சென்றோ, ரீடீம் செய்யலாம்.

தேசிய பென்ஷன் திட்டம் என்றால் என்ன? நான் அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்று விட்டேன். ஓய்வூதியப் பலனை எந்த வங்கியில் டிபாசிட் செய்யலாம் என்ற விபரம் தெரிவிக்கவும்

கண்ணதாசன், வாட்ஸாப்.

தனியார் நிறுவனப் பணியாளர்கள் முதல் சாதாரணர் வரை, அனைவரும் 60 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறுவதற்காக உருவாக்கப்பட்டதே, தேசிய பென்ஷன் திட்டம். 18 வயது முதல் 70 வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம்.

உங்களுக்கு 70 வயதுக்குள் இருந்தால், இந்தத் திட்டம் உங்களுக்கும் பொருந்தும். ஆனால், 75 வயது வரை தான் இந்த திட்டத்துக்குப் பங்களிப்பு செய்ய முடியும் என்பதால், நீங்கள் பணம் செலுத்தும் காலம் குறைவாக இருக்கும். இந்த முதலீட்டின் மூலமாக ஈட்டப்படும் வருவாயும் சற்று குறைவாகவே இருக்கும்.

பொதுத் துறை வங்கியாக பார்த்து, உங்கள் ஓய்வூதிய பலன்களை டிபாசிட் செய்யுங்கள். 60 வயதுக்கு மேல் இருந்தால், வழக்கத்தை விடக் கூடுதலாக அரை சதவீதம் வட்டி கிடைக்கும். இந்த வட்டி வருவாயே போதும் என்று தோன்றினால், அப்படியே நிம்மதியாக இருங்கள்.

இல்லை, இன்னும் கொஞ்சம் கூடுதலாக வட்டித் தொகை வந்தால் சவுகரியமாக இருக்கும் என்றால் அஞ்சலகம் செல்லுங்கள்.

அதைவிடவும் சற்று கூடுதலாக வருவாய் வேண்டும் என்று கருதினால், ரிஸ்க் எடுக்கும் துணிச்சலும் இருந்தால், மியூச்சுவல் பண்டு பக்கம் செல்லுங்கள். உங்களுடைய பணத்தேவையை ஒட்டித் தான் இந்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதைச் செய்வதற்கு உங்களுக்கு நீங்கள் தான் பெஸ்ட் ஆலோசகர்.

வீட்டுக் கடனை முன்னதாகவே அடைத்தால், கிரெடிட் ஸ்கோரில் ஏதேனும் பாதிப்பு வருமா?

சி. ராகசுதா, வாட்ஸாப்

பாதிப்பு ஏதும் ஏற்படாது. கடன் தொகையை செலுத்திய உடன், வங்கியில் இருந்து 'நோ டியூ' சான்றிதழ் வாங்கிக் கொள்ளுங்கள். அந்த விபரம், கிரெடிட் ஏஜென்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டதில் இருந்து 30 முதல் 60 நாட்களில், உங்கள் கிரெடிட் ஸ்கோர் பட்டியலில் இந்தக் கடன் 'குளோஸ்டு' என்று குறிக்கப்படும்.

அதாவது முறையாக திருப்பிச் செலுத்திவிட்டீர்கள் என்று அர்த்தம். ஆனால், உங்களுடைய ஒட்டுமொத்த கடன் அளவு, பயன்பாடு ஆகியவற்றை ஒட்டி, அப்போதைய மதிப்பீடு மாறும் என்பதால், கிரெடிட் ஸ்கோர் சற்று குறையலாம். அதைப் பற்றி கவலை வேண்டாம். அடுத்தடுத்த உங்கள் நிதி நிர்வாகத்தைச் சீராக செய்யும் போது, ஸ்கோர் உயர்ந்துவிடும்.

நீரிழிவு போன்ற ஏற்கனவே இருக்கும் நோய்களைத் தெரிவித்து, காப்பீடு வாங்கினால், அது உடனடியாக அமலுக்கு வருமா?

டி.வி.பன்னீர், மதுரை.

முதல் நாளில் இருந்து காப்பீடு வழங்கப்படும் என்று காப்பீடு நிறுவனங்கள் சொல்வதற்கு, அவர்கள் மொழியில் ஓர் அர்த்தம் இருக்கிறது.

அதாவது, அந்தக் காப்பீட்டை வாங்கிய தேதியில் இருந்து, 30 நாள் கழித்து, 31வது நாள் முதல் அமலுக்கு வரும். அதுதான் அவர்களைப் பொறுத்தவரை நாள் ஒன்று.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்






      Dinamalar
      Follow us