UPDATED : செப் 09, 2026 02:59 AM
ADDED : செப் 09, 2026 02:12 AM

'ரென்டோமோஜோ லிமிடெட்' என்பது வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் உபகரணங்களை
வாங்குவதற்கு பதிலாக, வாடகை மற்றும் சந்தா முறையில் வழங்கும் தொழில்நுட்ப நிறுவனமாகும். படுக்கை, சோபா, குளிர்சாதன பெட்டி, சலவை இயந்திரம், டி.வி., உள்ளிட்ட பொருட்களைவழங்குவதுடன், அவற்றின் பராமரிப்பு மற்றும்பழுது நீக்கத்தையும்
கவனிக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிக ஆரம்ப செலவு மற்றும் பராமரிப்பு சுமையை தவிர்க்க முடிகிறது.
நகரமயமாக்கல், வாடகை வீடுகளின் அதிகரிப்பு மற்றும் அடிக்கடி இடமாற்றம் ஆகியவை,
இந்நிறுவனத்தின் வணிக வளர்ச்சிக்கு சாதகமான
காரணிகளாக உள்ளன.
![]() |
சிறப்பம்சங்கள்
* ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் வீட்டு உபகரணங்களை வாடகை மற்றும் சந்தா முறையில் தருகின்ற துறையில் முன்னணி நிறுவனம்* மார்ச், 31, 2026 நிலவரப்படி, 29 நகரங்களில் 2.53 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களுடன் செயல்படுகிறது
* நிறுவனத்தின் வருவாயில் 97 சதவீதத்துக்கும் மேல், சந்தா அடிப்படையிலான வருவாயாக உள்ளது; சராசரி சந்தா காலம் 18 மாதங்கள்
* நிறுவனத்தின் மொத்த சாத்தியமான சந்தை அளவு ரூ.69,520 கோடியாக இருப்பதுடன், இத்துறை 2030 வரை, ஆண்டுக்கு சராசரியாக 11 சதவீதம் வளரக்கூடும்
* பொருட்களின் கொள்முதல் முதல் பராமரிப்பு, பழுது நீக்கம், திரும்ப பெறுதல் மற்றும் மறுபயன்பாடு வரை, முழு வாழ்க்கை சுழற்சியையும் நிர்வகிக்கிறது
* சந்தா சேவை, இணையவழி விற்பனை, மறுவிற்பனை மற்றும் மறுபயன்பாடு ஆகியவற்றுடன், நீர் சுத்திகரிப்பான் போன்ற அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள பிரிவுகளிலும் விரிவடைந்து வருகிறது.
ரிஸ்க்குகள்
* பெரும்பாலான சந்தாதாரர்கள் முதல் தர நகரங்களில்
இருப்பதால், குறிப்பிட்ட நகரங்களை நிறுவனம் அதிகம் சார்ந்துள்ளது
* வாடகைக்கு வழங்கும் பொருட்களை தொடர்ந்து வாங்குவதற்கும், புதுப்பிப்பதற்கும் அதிக முதலீடு தேவைப்படுகிறது
* முதல் தர நகரங்களை தவிர மற்ற நகரங்களில் நிறுவனத்தின் பிராண்டு அறிமுகமும் சந்தை ஊடுருவலும் குறைவாக உள்ளது
பொருட்களை வினியோகித்தல் மற்றும் நிறுவுதல் போன்ற பணிகளில் வெளிப்புற லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களை
அதிகம் சார்ந்துள்ளது
* புதிய பொருட்களின் விலை மற்றும் புதுப்பிக்கும் செலவுகள் அதிகரித்தால், நிறுவனத்தின் லாப வரம்புகள் பாதிக்கப்படலாம்
* பர்லென்கோ உள்ளிட்ட சில நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்கிறது; வாடகை முறையிலிருந்து வாடிக்கையாளர்கள் பொருட்களை நேரடியாக வாங்கும் முறைக்கு மாறினால், நிறுவனத்தின் சந்தா வருவாய் பாதிக்கப்படலாம்.
கவனம்:
முதலீடு செய்யும் முன் விலை மதிப்பீடு, சந்தையின் போக்கு மற்றும் நிறுவன வளர்ச்சியின் நிலைத்தன்மை ஆகியவற்றில், முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள், நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் பங்கின் விலை மதிப்பிடப்பட்ட முறை ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் விரிவாக ஆய்வு செய்தே முடிவெடுக்க வேண்டும்.

