/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
காது கொடுத்து கேட்காத அரசு கடும் அதிருப்தியில் ஜவுளி துறை
/
காது கொடுத்து கேட்காத அரசு கடும் அதிருப்தியில் ஜவுளி துறை
காது கொடுத்து கேட்காத அரசு கடும் அதிருப்தியில் ஜவுளி துறை
காது கொடுத்து கேட்காத அரசு கடும் அதிருப்தியில் ஜவுளி துறை
ADDED : மார் 08, 2024 10:16 PM

பல்லடம்,:மின் கட்டண உயர்வு, பஞ்சு நுால் விலை ஏற்ற, இறக்கம் என, ஜவுளி தொழில் துறையினர் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்த ஆலோசனை கூட்டம், பல்லடத்தில் நேற்று நடந்தது.
திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள், மின் கட்டண உயர்வு, பஞ்சு நுால் விலை ஏற்ற, இறக்கம் மற்றும் ரெயான் பஞ்சு விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதன் காரணமாக, உற்பத்தியை 50 சதவீதம் குறைப்பதாக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பின் நிர்வாகி முருகேசன் கூறியதாவது:
துணி விலையை நிர்ணயம் செய்வது தான் இப்போது பிரச்னையாக உள்ளது. அண்டை மாநிலங்கள் துணி விலையை குறைத்து விற்பதால், போட்டி போட முடிவதில்லை. எனவே, உற்பத்தியை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் நடத்தியும், அமைச்சர்களை பலமுறை சந்தித்தும், மின் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி விட்டோம். ஆனால், காது கொடுத்து கேட்கக்கூட மாநில அரசு தயாராக இல்லை.
எனவே, முடிந்த அளவு சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி, மின் கட்டணத்தைக் குறைத்துக் கொள்ளும்படியும், நிலைமை சீராகும் வரை உற்பத்தியை குறைத்துக் கொண்டு, கட்டுப்பாடுடன் தொழிலை நடத்தும்படியும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
மின் கட்டண உயர்வு காரணமாக, ஏற்கனவே பலர் உற்பத்தியை நிறுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

