தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/‘ஆப்ஷன்’ வர்த்தகம் 43% அதிகரிப்பு

‘ஆப்ஷன்’ வர்த்தகம் 43% அதிகரிப்பு

‘ஆப்ஷன்’ வர்த்தகம் 43% அதிகரிப்பு


UPDATED : அக் 29, 2026 12:00 AM

ADDED : அக் 28, 2026 11:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 12:00 AM ADDED : அக் 28, 2026 11:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

க டந்த அக்டோபர் மாதத்தில், பி.எஸ்.இ., என்.எஸ்.இ., ஆகிய இரு பங்கு சந்தைகளிலும் மொத்தமாக ‘ஆப்ஷன்’ வர்த்தகம் கிட்டத்தட்ட 43 சதவீதம் உயர்ந்து, 1.06 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது சந்தை தரவுகள் வாயிலாக தெரியவருகிறது.

கடந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டில், ஆப்ஷன் வர்த்தக அளவுகள் 25 சதவீதம் குறைந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தினசரி வர்த்தகமான ஆப்ஷன் ஒப்பந்தங்களின் மொத்த எண்ணிக்கை 36 கோடியாக உயர்ந்து உள்ளது. என்.எஸ்.இ., சந்தையில் மட்டும், தினசரி ஆப்ஷன் வர்த்தக அளவு 34 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதைவிட அதிகமாக பி.எஸ்.இ., சந்தையில் தினசரி ஆப்ஷன் வர்த்தக அளவு 61 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் பங்கு வர்த்தக பிரிவில் பெரிய ஏற்றம் இல்லை.

பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்ற, இறக்கங்களால், தற்காலிகமாக பங்கு வர்த்தகத்தை விட ஆப்ஷன் வர்த்தகத்தில் டிரேடர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளதே இந்த மாற்றத்துக்கு காரணம் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us