UPDATED : ஜூலை 30, 2025 07:17 AM
ADDED : ஜூலை 30, 2025 05:53 AM

நிப்டி: 24,821.10
மாற்றம்: 140.20 ஏற்றம் பச்சை
சென்செக்ஸ்: 81,337.95
மாற்றம்: 446.93 ஏற்றம் பச்சை
உயர்வுக்கு காரணங்கள்
* முன்னணி நிறுவனப் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியது
* நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் கைகொடுத்தது.
வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேறுவதன் எதிரொலியாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின.
உலகளாவிய சந்தைப்போக்கு கலவையாக இருந்த போதிலும், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சற்று கைகொடுக்கவே, ரியல் எஸ்டேட், மருந்து தயாரிப்பு துறை பங்குகளுடன், ரிலையன்ஸ், எச்.டி.எப்.சி., வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர்.
இதனால், கடந்த மூன்று நாட்கள் சந்தை கண்ட சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நிப்டி, சென்செக்ஸ் தலா 0.55 சதவீதம் உயர்வுடன் நிறைவடைந்தன.
உலக சந்தைகள்
திங்களன்று அமெரிக்கச் சந்தைகள் கலவையுடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி ஹாங்காங்கின் ஹேங்சேங் குறியீடுகள் சரிவுடனும் ; தென் கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடனும் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின.
உயர்வு கண்ட பங்குகள் - நிப்டி (%)
ஜியோ பைனான்ஸ் 4.77
ரிலையன்ஸ் 2.09
ஏசியன் பெயின்ட் 1.97
சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%)
எஸ்.பி.ஐ.,லைப் 0.93
ஆக்ஸிஸ் வங்கி 0.80
டி.சி.எஸ்., 0.72
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் கோடி ரூபாய்க்கு பங்குகளை இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.63 சதவீதம் அதிகரித்து, 70.48 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 மாதங்களில் காணாத அளவுக்கு, 11 பைசா குறைந்து, 86.81 ரூபாயாக இருந்தது.