/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஏற்றுமதியாகும் மசாலா பொருட்களுக்கு பரிசோதனையை கட்டாயமாக்கியது அரசு
/
ஏற்றுமதியாகும் மசாலா பொருட்களுக்கு பரிசோதனையை கட்டாயமாக்கியது அரசு
ஏற்றுமதியாகும் மசாலா பொருட்களுக்கு பரிசோதனையை கட்டாயமாக்கியது அரசு
ஏற்றுமதியாகும் மசாலா பொருட்களுக்கு பரிசோதனையை கட்டாயமாக்கியது அரசு
ADDED : ஏப் 26, 2024 01:38 AM

புதுடில்லி:சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு, மசாலா பொருட்கள் ஏற்றுமதிக்கு முன் 'எத்திலீன் ஆக்சைடு' பரிசோதனையை கட்டாயமாக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
'எம்.டி.எச்., மற்றும் எவரெஸ்ட்' போன்ற இந்திய மசாலா பிராண்டுகளால் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மசாலா பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்கண்ட இரு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்ட சில மசாலா பொருட்களில், எத்திலீன் ஆக்சைடு எனப்படும் பூச்சிக்கொல்லி நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த இரு பிராண்டை சேர்ந்த சில மசாலா பொருட்களுக்கு இரு நாடுகளும் தடை விதித்தன.
இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், மசாலா வாரியத்தின் தொழில்துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டது.
இதன் முடிவில், இந்த இரு நாடுகளுக்கான மசாலா ஏற்றுமதிகள், புற்றுநோய்க்கான காரணியான அப்லாடாக்சின் மற்றும் சூடான் I - IV என்ற சாயத்திற்கான கட்டாய சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பிற நாடுகளுக்கான சரக்குகளுக்கும் எத்திலீன் ஆக்சைடு சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்திய மசாலா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக, இரு நாடுகளிலும் உள்ள இந்திய துாதரங்களிடம் இருந்து விரிவான அறிக்கையை வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட மசாலா பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களிடமும் விபரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
2022 - 23ம் நிதியாண்டில், இந்தியா, 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான மசாலா பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது

