/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
போர் விமான இன்ஜின் தயாரிப்பு 4 நாடுகளுடன் இந்தியா பேச்சு
/
போர் விமான இன்ஜின் தயாரிப்பு 4 நாடுகளுடன் இந்தியா பேச்சு
போர் விமான இன்ஜின் தயாரிப்பு 4 நாடுகளுடன் இந்தியா பேச்சு
போர் விமான இன்ஜின் தயாரிப்பு 4 நாடுகளுடன் இந்தியா பேச்சு
ADDED : மார் 10, 2025 11:11 PM

புதுடில்லி ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களுக்கான நவீன ஜெட் இன்ஜின் தொழில்நுட்பத்தை உள்நாட்டில் உருவாக்க, நான்கு நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
போர் விமான இன்ஜின் தொழில்நுட்பத்தை உருவாக்க, அடுத்த 10 ஆண்டுகளில் 40,000 முதல் 50,000 கோடி ரூபாயை மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்சமயம், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நான்கு முக்கிய நாடுகளுடன் இந்தியா ராணுவ ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வருகிறது.
விமானப்படையில் உள்ள மிக் 29, சுகோய் 30 எம்.கே.ஐ., மற்றும் ஜாகுவார் போர் விமானங்களுக்கான இன்ஜின்களை உற்பத்தி உரிம ஒப்பந்தம் அடிப்படையில், மத்திய பொதுத்துறை நிறுவனமான 'ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்' உற்பத்தி செய்கிறது. ஆனால், ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களுக்கு, அதிக உந்துதல் கொண்ட 'டர்போபேன் இன்ஜின்' தேவைப்படுகிறது.
ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகளுடன் இருக்கும் உற்பத்தி ஒப்பந்தம் உரிமம் அடிப்படையில், பல ராணுவ உற்பத்திகள் உள்நாட்டில் மேற்கொள்ளப்படுகின்றன.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், 'காவேரி' என்ற திட்டத்தின் கீழ் ஐந்தாம் தலைமுறை இன்ஜின் தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறது. இருப்பினும், இந்த வகையான தொழில்நுட்பத்தை எந்த உதவியுமின்றி உருவாக்க, குறைந்தபட்சம் 10 முதல் 15 ஆண்டுகள் தேவைப்படும்.
போர் விமானங்களுக்கான இன்ஜின் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில், குறிப்பிடத்தக்க சில நிறுவனங்களே வெற்றி அடைந்துள்ளன. அதனால், இந்த ஐந்தாம் தலைமுறை விமானங்களுக்கான இன்ஜின் தொழில்நுட்பத்தை உருவாக்க, வெளிநாட்டு நிறுவன கூட்டணியை இந்தியா எதிர்பார்க்கிறது.
அமெரிக்காவின் ஜி.இ., என்ற ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் மற்றும் பிரான்ஸின் சாப்ரான் ஏரோஸ்பேஸ் நிறுவனங்களுடன் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது.
இதில், போர் விமான இன்ஜின் தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள, ஜி.இ., நிறுவனத்திற்கு, அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
சீனா, ஆறாம் தலைமுறை முன்மாதிரி போர் விமானத்தை அண்மையில் காட்சிப்படுத்தியது
ஐந்தாம் தலைமுறை ஜே.எப்., 35 போர் விமானத்தை பாகிஸ்தானுக்கு சீனா வழங்க உள்ளது
இந்த ஆண்டிற்குள், போர் விமான இன்ஜின் உற்பத்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வாய்ப்பு

