sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

செயற்கை நுண்ணறிவு சேவை ரிலையன்ஸ் தீவிர ஆர்வம் ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்புகள்

/

செயற்கை நுண்ணறிவு சேவை ரிலையன்ஸ் தீவிர ஆர்வம் ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்புகள்

செயற்கை நுண்ணறிவு சேவை ரிலையன்ஸ் தீவிர ஆர்வம் ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்புகள்

செயற்கை நுண்ணறிவு சேவை ரிலையன்ஸ் தீவிர ஆர்வம் ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்புகள்


ADDED : ஆக 30, 2024 01:49 AM

Google News

ADDED : ஆக 30, 2024 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை:'ரிலையன்ஸ் இண்டஸ்ட்டிரீஸ்' நிறுவனத்தின் 47வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அதில் பேசிய, நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, உலக அளவிலான 50 பெரிய நிறுவனங்களில் இடம்பிடித்துள்ள ரிலையன்ஸ், விரைவில் 30 இடங்களுக்குள் இடம்பெறும் என்றார்.

முக்கிய அம்சங்கள்


 தீபாவளிப் பரிசாக ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 'ஜியோ க்ளவுட்' என்ற புதிய வசதி வாயிலாக, 100 ஜி.பி., இலவச சேமிப்பக வசதி வழங்கப்படும்

 ஜியோ போன் கால் ஏ.ஐ., என்ற வசதியில், 49 கோடி ஜியோ வாடிக்கையாளர்கள், போன் அழைப்புகளை பதிவு செய்து, ஜியோ க்ளவுட் சேமிப்பகத்தில் சேகரிக்கலாம். போன் உரையாடலை எழுத்தில் பெறவும் வசதி

 ரிலையன்ஸ் குழுமத்தின் வர்த்தகம் 10 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், ரிலையன்ஸ் நிறுவனம், மொத்தம் 5.28 லட்சம் கோடி ரூபாயை பல்வேறு வணிகங்களில் முதலீடு செய்துள்ளது

 பல்வேறு வரிகள் வாயிலாக, கடந்த நிதியாண்டில் 1.86 லட்சம் கோடி ரூபாயை அரசுக்கு செலுத்தியதன் வாயிலாக, அரசின் கருவூலத்துக்கு நாட்டின் மிகப் பெரிய பங்களிப்பாளராக, ரிலையன்ஸ் உள்ளது

 அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனங்களின் வருவாய், லாபத்தை இரட்டிப்பாக்க இலக்கு

 குஜராத்தின் ஜாம்நகரில், 30 ஜிகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட பேட்டரி ஆலையில், அடுத்த ஆண்டில் உற்பத்தி தொடங்கும்

 மின் உற்பத்திக்காக, குஜராத்தின் கட்ச் பகுதியில் 2,000 ஏக்கர் பயனற்ற நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அடுத்த 10 ஆண்டுகளில் 15,000 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்யப்படும்.

 'ஜியோ ஏர்பைபர்' வாடிக்கையாளர் எண்ணிக்கை 20 லட்சமாக உள்ள நிலையில், மாதந்தோறும் 10 லட்சம் பேரை இணைக்க திட்டம்

 விலை உயர்ந்த நகை வணிகத்தில் ஈடுபடவும், அழகுசாதனப் பொருட்கள் வணிகத்தை விரிவுபடுத்தவும் திட்டம்

 இந்தியாவை விளையாட்டில் சிறந்த நாடாக முன்னேற்றம் அடையச் செய்ய, ரிலையன்ஸ் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும்

போனஸ் பங்கு


ரிலையன்ஸ் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், அந்நிறுவன பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு ஒன்று என்ற அடிப்படையில் போனஸ் பங்கு வழங்க பரிசீலிப்பதாக, பங்குச் சந்தையில் அந்நிறுவனம் தெரிவித்தது. இதுதொடர்பாக வருகிற 5ம் தேதி, நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us