sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

ஜீரோ பேலன்ஸ் : நல்ல காலம் பிறக்குது; நம்பிக்கையோடு இருங்கள் அடுத்த தீபாவளிக்குள் நிப்டி 30,000 புள்ளிகளை தொடும்

/

ஜீரோ பேலன்ஸ் : நல்ல காலம் பிறக்குது; நம்பிக்கையோடு இருங்கள் அடுத்த தீபாவளிக்குள் நிப்டி 30,000 புள்ளிகளை தொடும்

ஜீரோ பேலன்ஸ் : நல்ல காலம் பிறக்குது; நம்பிக்கையோடு இருங்கள் அடுத்த தீபாவளிக்குள் நிப்டி 30,000 புள்ளிகளை தொடும்

ஜீரோ பேலன்ஸ் : நல்ல காலம் பிறக்குது; நம்பிக்கையோடு இருங்கள் அடுத்த தீபாவளிக்குள் நிப்டி 30,000 புள்ளிகளை தொடும்


ADDED : அக் 26, 2025 09:40 PM

Google News

ADDED : அக் 26, 2025 09:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எப்படி தமிழ் புத்தாண்டு, வள்ளுவராண்டு ஆகியவற்றை சொல்கிறோமோ அதுபோல், பங்கு சந்தை வட்டாரத்தில், ஒவ்வொரு தீபாவளியின் போதும், ஒரு புதிய நிதியாண்டு பிறப்பதாக நம்பிக்கை. அதற்கு, 'சம்வத்' என்று பெயர்.

கடந்த நிதியாண்டு சம்வத், 2081. அது உண்மை யில் நம் பொறுமையையும், ஒழுங்கையும் கடுமையாக சோதிப்பதாக இருந்தது. இந்தக் காலத்தில் பங்கு சந்தையில் இருந்து பெரிய வருவாய் இல்லை.

சம்வத் 2082க்குள் நுழையும்போது, தேக்கத்தில் இருந்து வளர்ச்சியை நோக்கிய பாதைக்கான ஆரம்ப அறிகுறிகள் தெரிகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் நம்பிக்கை அளிக்கத் துவங்கியுள்ளன. உள்நாட்டு உற்பத்தி, நுகர்வு, செலவு உள்ளிட்ட விஷயங்களில், கொள்கை ரீதியான முடிவுகள் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்த போகின்றன.

எதிர்பார்ப்புகள்


தங்கமும், வெள்ளியும்: இரண்டு உலோகங்களின் விலைகளும் மிகவும் அதிகமாக இருக்கின்றன. ஆனால், தங்கம் இன்னும் 12 - 15 சதவீத வளர்ச்சியை பெறக்கூடும். வெள்ளியை பற்றி அப்படி எதுவும் சொல்ல முடியாது. தங்கத்திலும், வெள்ளியிலும் சேர்ந்து முதலீடு செய்யும் ஏதேனும் மியூச்சுவல் பண்டு திட்டம் இருந்தால், அது பாதுகாப்பையும், வளர்ச்சியையும் தரும்.

கொள்கை ரீதியான ஆதரவு: ஜி.எஸ்.டி., 2.0 அறிமுகம், வருவான வரி குறைப்பு, 1 சதவீதம் அளவுக்கு ரெப்போ வட்டி குறைப்பு, 150 புள்ளிகள் சி.ஆர்.ஆர்., குறைப்பு ஆகியவை பணப் புழக்கத்தை அதிகப்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் நிலைப்பாடுகள் கடுமையாக மாறினாலும், இந்தப் பணப் புழக்கம் நம் நாட்டுக்கு உதவும்.

வருவாய் எதிர்பார்ப்பு: இந்த ஆண்டில் பெருநிறுவனங்கள், 12 முதல் 14 சதவீத வளர்ச்சியைப் பெறும் என்று தெரிகிறது. அதனால், இந்த சம்வத்தில், பங்கு சந்தைகள் இரட்டை இலக்க வளர்ச்சியை அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மாறும் தலைமைகள்:

*வங்கி, நிதி சேவைகள், காப்பீடு - கடந்த ஆண்டு சற்றே நொண்டினாலும், இந்த ஆண்டு சந்தை மீட்சிக்கு உறுதுணையாக இருந்து தலைமை வகிக்கப் போகிறது

* உற்பத்தி அண்டு உள்கட்டு மானம் - பல திட்டங்கள் முடிவு பெறுவதால், அவை, வருவாய் பெருக உதவும் .

* வாகனத் துறை - நான்கு ஆண்டுகளாக பின்தங்கியிருந்தாலும், இந்த ஆண்டு, இந்த துறை மீட்சியடைவது தெரிகிறது

* எரிசக்தி - இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும், இந்த துறை மிக முக்கியமான துறையாக இருக்கப் போகிறது.

மாற்று முதலீடுகள்: ஐ.பி.ஓ.,வுக்கு முன்பு முதலீடு செய்யும் 'ஆல்டர்நேட் இன்வெஸ்ட்மென்ட் பண்டு'களை தேர்வு செய்யுங்கள். அவை, அடுத்த 24 மாதங்களில் முதலீட்டை பன்மடங்கு பெருக்கும்.

பணப்புழக்கம்: பணப்புழக்கம் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதனால், ஒவ்வொரு மாதமும், மியூச்சுவல் பண்டுகளின் எஸ்.ஐ.பி.,களுக்கு வரும் 28,000 கோடி ரூபாய் குறைய போவதில்லை. அது பங்கு சந்தைக்கு பலத்தை தரப் போகிறது.

சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், சிறு மியூச்சுவல் முதலீட்டாளர்கள் தான், பெரு முதலீட்டாளர்கள் மற்றும் ஆல்டர்நேட் இன்வெஸ்ட்மென்ட் பண்டுகள், பி.எம்.எஸ்., எனப்படும் போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் சர்வீசஸ் முதலீட்டாளர்களுக்கு மறைமுகமாக உதவப் போகின்றனர்.

ஸ்மால் கேப் நிறுவனங்கள்: சம்வத் 2081ல் கடுமையான சரிவை கண்ட ஸ்மால் கேப் நிறுவனங்கள், இந்த ஆண்டு மீண்டும் புத்துயிர் பெறும். சரியானவற்றை தேர்வு செய்து கொஞ்சமாக முதலீடு செய்தால், நல்ல ரிட்டர்ன் பார்க்கலாம்.

ஆனால், பேராசைப்பட்டு, மொத்த பணத்தையும் அவற்றில் கொட்டினால், அது மிகப்பெரிய ரிஸ்க். ஸ்மால் கேப் நிறுவனங்கள் ஒருவரை செல்வந்தனாக மாற்றும் அல்லது பிச்சைக்காரனாக ஆக்கும். அங்கே சராசரி, சமநிலை வருவாய் என்பதே இல்லை என்பது ஞாபகமிருக்கட்டும்.

பங்கு சந்தை நிறுவனங்கள்: அடுத்த நான்கு ஆண்டுகளில், இந்திய பங்கு சந்தை இரண்டு மடங்கு ஆகும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், பங்கு சந்தை சார்ந்த என்.எஸ்.சி., - பி.எஸ்.சி., - சி.டி.எஸ்.எல்., - என்.எஸ்.டி.எல்., மோதிலால் ஓஸ்வால், க்ரோ, ஏஞ்சல் ஒன் போன்ற நிறுவனங்கள் மிகச் சிறப்பான வளர்ச்சியை பெறக்கூடும்.

வர்த்தக ரியல் எஸ்டேட்: ஐந்து ஆண்டுகளாக, பெரிய வருவாய் ஈட்டித் தராத இந்த துறை, கடைசியாக, இந்த ஆண்டு, லிக்விட் பண்டுகளை போல் இரு மடங்கு வருவாய் ஈட்டித் தரக்கூடும்.

சர்வதேச உதவிகள்


உலக அளவில் நடைபெறும் விஷயங்கள், நிச்சயம் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். அடுத்த 60 நாட்களில், இந்திய -- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானால், இந்த ஆண்டு மிகச் சிறப்பாக லாபம் ஈட்டக்கூடிய துறை களில், பார்மா மற்றும் ஐ.டி., யும் சேர்ந்துகொள்ளும்.

பங்கு சந்தை எதிர்பார்ப்பு


நிச்சயம்: அமெரிக்காவோடு வர்த்தக ஒப்பந்தம் இல்லையென்றால், அடுத்த தீபாவளிக்குள் நிப்டி 30,000 புள்ளிகளை தொடும்.



உற்சாகம்: வர்த்தக ஒப்பந்தமும் போடப்பட்டு, புவிசார் அரசியலில் சமநிலையும் ஏற்படுமானால், நிப்டி 32,000 புள்ளிகளை தொடும். அதில், ஸ்மால் கேப் பங்குகள் மிகச் சிறப்பான முன்னேற்றத்தை எட்டும்.

முந்தைய நிலை


பங்கு சந்தைகள் எப் போதும் சுழன்றுகொண்டே இருக்கும். இதில் ஒரு உறுதியான விதி உண்டு. அதாவது முந்தைய நிலைக்கு திரும்புதல். அதுதான் இப்போது நடைபெறப் போகிறது. பங்கு சந்தையில் தேக்கமும், சமநிலையும் ஏற்பட்ட பின், இந்த சம்வத் 2082ல் வளர்ச்சி, மீட்சி, புது நம்பிக்கை ஆகியவை தோன்றப் போகின்றன.

நல்ல காலம் பிறக்குது... நம்பிக்கையோடு இருப்பது நல்லது தான். அதேசமயம் கொஞ்சம் எச்சரிக்கையோடும் இருங்கள். அடுத்த வளர்ச்சி காலத்தில் இன்னும் கொஞ்சம் உஷாராக நடந்து கொள்ளுங்கள்.

சி.கே.சிவராம்



நிறுவனர், ஐகுளோபல் ஆல்டர்நேட்






      Dinamalar
      Follow us