நிப்டி ஸ்மால்கேப் பங்குகள் 20% அளவுக்கு சரிந்தது ஏன்?
நிப்டி ஸ்மால்கேப் பங்குகள் 20% அளவுக்கு சரிந்தது ஏன்?
UPDATED : ஜன 27, 2026 02:16 PM
ADDED : ஜன 27, 2026 04:25 AM

கொரோனாவுக்கு பின், கடந்த 2020 முதல் 2024 வரை 'ஸ்மால் கேப்' நிறுவனங்களின் பங்குகள் நல்ல வளர்ச்சியை பதிவு செய்திருந்தன. இந்த காலகட்டத்தில், 'நிப்டி 100 குறியீடு' 32 சதவீத உயர்வு கண்ட நிலையில், 'நிப்டி ஸ்மால்கேப் 250 குறியீடு' ஆண்டுக்கு 50 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை பதிவு செய்திருந்தது .
வருவாய் வளர்ச்சி காரணமாக, ஸ்மால்கேப் நிறுவனங்களின் சந்தை மதிப்பு பன்மடங்கு வளர்ச்சி கண்டன. ஆனால், நிறுவனங்களின் வருவாய் சரிவை காண துவங்கிய நிலையில், தற்போது தவிர்க்க இயலாத வீழ்ச்சி கண்டுள்ளன.
கடந்த 2025ல், நிப்டி ஸ்மால்கேப் 250 குறியீடு, 6 சதவீத சரிவை கண்டுள்ளது. இதைப் பார்க்கும் போது, ஸ்மால்கேப் பங்குகள் சிறிய சரிவை கண்டுள்ளன என்பது போல தோன்றும்.
ஆனால், உண்மையில், இந்த குறியீட்டில் இடம்பெற்றுள்ள 250 நிறுவனங்களில், 200 நிறுவனங்கள், அதாவது 80 சதவீத நிறுவனங்களின் பங்குகள், உச்சபட்ச விலையில் இருந்து 20 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளன.
பண்டு மேலாளர்கள், முதலீட்டாளர்கள் வெறுமனே பங்குகளை மட்டும் பார்க்காமல், நிறுவனங்களின் அடிப்படை செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து, அதற்கேற்ப போர்ட்போலியோவை மாற்றுகின்றனர்.
இதனால், தற்காலிக சிக்கல்களை எதிர்கொள்ளும் நிறுவனங்களின் பங்குகள், மிக கடுமையான சரிவை சந்திக்கின்றன.
இவை தவிர, வரி விதிப்பு நிச்சயமற்றத்தன்மை, நீடித்த பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாய இடுபொருள் நிறுவனங்கள், உலகளாவிய தேவையில் ஐ.டி., நிறுவனங்கள் எதிர் கொண்ட நிச்சயமற்ற சூழல், குறிப்பிட்ட சில பொருள்களில் நுகர்வு குறைந்தது ஆகிய சவால்கள், ஸ்மால்கேப் பங்கு விலை சரிவுக் கான காரணங்களாக நிபுணர் கள் தெரிவிக்கின்றனர்.
கிட்டத்தட்ட 250 நிறுவனங்களில், 200 நிறுவனங்கள், அதாவது 80 சதவீத நிறுவனங்களின் பங்குகள், உச்சபட்ச விலையில் இருந்து 20 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளன.

