ADDED : ஏப் 24, 2026 12:50 AM

நிப்டி
கணிசமான இறக்கத்தில் துவங்கிய நிப்டி, சரிவில் இருந்து மீள முயன்றது. இருப்பினும், வர்த்தக நிறைவில் 205 புள்ளிகள் சரிவுடனே முடிந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் வீழ்ச்சியுடனே நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி100 குறியீடு' அதிகபட்சமாக 0.93 சதவீத சரிவுடனும், 'நிப்டி மைக்ரோகேப்250 குறியீடு' குறைந்தபட்சமாக 0.22 சதவீத வீழ்ச்சியுடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில் 6 குறியீடுகள் ஏற்றத்துடனும், 13 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ஆட்டோ' குறியீடு அதிகபட்சமாக 2.35 சதவீத சரிவுடனும், 'நிப்டி பார்மா' குறியீடு அதிகபட்சமாக 2.36 சதவீத உயர்வுடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,396 பங்குகளில் 1,253 ஏற்றத்துடனும் 2,036 சரிவுடனும், 107 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டியின் மொமெண்டம் இண்டிக்கேட்டர்கள் இன்னமும் பாசிட்டிட்வாக இருக்கின்ற போதிலும் வலுவிழந்து விட்டன. 'ஸ்டொக்காஸ்ட்டிக் ஆசிலேட்டரும்' கீழ்நோக்கி திரும்பிவிட்டது. டெக்னிக்கலாக சைடுவேஸ் அல்லது பியரிஷான சூழலே நிலவுகிறது. இறக்கம் வந்தால் அது 24,000 மற்றும் 23,500 வரையிலும் மெள்ள மெள்ள செல்வதற்கான வாய்ப்பு இருப்பதையே இது காட்டுகிறது. ஒருவேளை செய்திகள் பாசிட்டிவ்வாக இருந்தால் மீண்டும் 24,500ஐ நோக்கிய பயணத்தை நிப்டி ஆரம்பிக்கக்கூடும்.
ஆதரவு 24,100 24,025 23,950
தடுப்பு 24,275 24,375 24,450
