sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் நிலைப்பதற்கான டெக்னிக்கல் சூழல் உருவாகவில்லை

 டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் நிலைப்பதற்கான டெக்னிக்கல் சூழல் உருவாகவில்லை

 டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் நிலைப்பதற்கான டெக்னிக்கல் சூழல் உருவாகவில்லை


UPDATED : பிப் 26, 2026 02:15 AM

ADDED : பிப் 26, 2026 02:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 26, 2026 02:15 AM ADDED : பிப் 26, 2026 02:02 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலையில் வேகமான ஒரு ஏற்றத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து ஏற்றம் கண்டு, ஒரு மணியளவில் ஏறிய புள்ளிகளில் பெரும்பான்மையானவற்றை இழந்து, நாளின் இறுதியில் 57 புள்ளிகள் உயர்வுடன் நிப்டி நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்தில் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டிஸ்மால்கேப் 50' குறியீடு, அதிகபட்சமாக 1.00 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு குறைந்தபட்சமாக 0.18 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில் 15 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 4 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 2.70 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிக பட்சமாக 0.39 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,286 பங்குகளில், 1,661 ஏற்றத்துடனும்; 1,539 இறக்கத்துடனும்; 86 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 20, 50 மற்றும் 100 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிறைவடைந்துள்ளது. தற்போதைய டெக்னிக்கல் சூழலில் 25,600/25,650 என்ற லெவல்கள் நல்லதொரு ரெசிஸ்டென்ஸாக உருவெடுத்துள்ளன. 25,650-க்கு மேலே சென்றால், 25,800 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது என்ற போதிலும், ஏற்றம் வந்தால் அது நிலைத்து நிற்பதற்கு ஏதுவான சிக்னல்கள் தற்போது தென்படவில்லை. ரெசிஸ்டென்ஸ்கள் ஒரே பாய்ச்சலில் தாண்டப்படாதவரை, குழப்பமான சூழலே நிலவும் என்று எதிர்பார்க்கலாம். Image 1541072

Image 1541073

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us