sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ டெக்னிக்கல் லெவல்கள் செயல்படாமல் போகக்கூடும்

 டெக்னிக்கல் லெவல்கள் செயல்படாமல் போகக்கூடும்

 டெக்னிக்கல் லெவல்கள் செயல்படாமல் போகக்கூடும்


ADDED : பிப் 25, 2026 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 01:19 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலையில் இறக்கத்தில் ஆரம்பித்த நிப்டி, தொடர்ந்து இறக்கம் கண்டு, நாளின் இறுதியில் 288 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் சரிவில் நிறைவடைந்தன.

இவற்றில் 'நிப்டி மிட்கேப் 150' குறியீடு குறைந்தபட்சமாக 0.28 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிக பட்சமாக 1.27 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

19 துறை சார்ந்த குறியீடுகளில் 9 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 10 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில் 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிக பட்சமாக 0.93 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி ஐ.டி.,' குறியீடு அதிகபட்சமாக 4.74 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,270 பங்குகளில் 1,068 ஏற்றத்துடனும், 2,101 இறக்கத்துடனும், 101 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

'எப் அண்டு ஓ' எக்ஸ்பைரி தினத்தன்று, திடீர் சரிவை சந்தித்த நிப்டி, அனைத்து குறுகிய கால சராசரிகளுக்கும் கிழே சென்றுவிட்டது. தற்போதைக்கு இருக்கும் ஒரே ஆறுதலான விஷயம் 200 நாள் சராசரிக்கு கீழே செல்லாமல் இருப்பது தான்.

'எம்.ஏ.சி.டி.,' இன்னும் இறங்க வாய்ப்புள்ளது என்ற தோற்றத்தை காட்டுகிறது. 'ஆர்.எஸ்.ஐ.,' மற்றும் 'ஸ்டோக்காஸ்ட்டிக்' இண்டிகேட்டர்கள் இன்னமும் 'ஓவர்சோல்டு' நிலைமை உருவாகவில்லை என்பதை காட்டுகிறது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால் பெரிய மாற்றம் இல்லாத நிலையோ அல்லது இறக்கமோ டெக்னிக்கலாக வர வாய்ப்புள்ளது.

இருப்பினும், 'எப் அண்டு ஓ' எக்ஸ்பைரிக்கு அடுத்த நாள் வர்த்தகம் என்பதால், டெக்னிக்கல்கள் மீண்டும் பொய்யாகிவிடுவதற்கான வாய்ப்பும் இருக்கவே செய்கிறது.

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)

நிப்டி50 (எண்ணிக்கை)

எட்டர்னல் 254.40 -13.60

ஹெச்.டி.எப்.சி., பேங்க் 911.50 -12.10

இன்போசிஸ் 1,280.20 -47.30

விப்ரோ 200.49 -5.40

டாடா ஸ்டீல் 209.00 0.86

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 70.75 0.71

எஸ் பேங்க் 20.85 -0.04

சுஸ்லான் எனர்ஜி 44.35 0.10

என்.எம்.டி.சி., 80.85 1.94

என்.ஹெச்.பிசி., 75.81 1.73

நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)

பந்தன் பேங்க் 181.17 7.52

ஏஜிஸ் லாஜிஸ்ட்டிக்ஸ் 700.00 -2.40

நாட்கோ பார்மா 944.75 51.75

ஐநாக்ஸ் விண்ட் 95.49 -0.64

என்.பி.சி.சி., 94.86 -0.48

மற்ற சில பங்குகளின் விலை விவரம்

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் 262.10 3.85

டாபர் இந்தியா 517.10 2.75

பெடரல் பேங்க் 296.30 0.10

ஐ.டி.சி., ஹோட்டல்ஸ் 180.00 -0.86

ஜிந்தால் ஸ்டெயின்லெஸ் 793.00 -2.20

ஆதரவு 25,285 25,140 25,020

தடுப்பு 25,600 25,760 25,870

*****

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us