தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ்: 'கன்சாலிடேஷன்' நடைபெறும் வாய்ப்பே அதிகம்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 'கன்சாலிடேஷன்' நடைபெறும் வாய்ப்பே அதிகம்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 'கன்சாலிடேஷன்' நடைபெறும் வாய்ப்பே அதிகம்


UPDATED : நவ 11, 2026 01:25 AM

ADDED : நவ 10, 2026 10:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 01:25 AM ADDED : நவ 10, 2026 10:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிப்டி முக்கிய சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலே 25,044.65ல் நிறைவடைந்திருப்பது ஏற்றத்துக்கான டெக்னிக்கல் நிலையை எடுத்துக்காட்டுகிறது. எம்.ஏ.சி.டி., மற்றும் ஆர்.ஓ.சி., ஆகியவை, ஏற்றத்தின் வேகம் வலுவாக இருப்பதை உணர்த்துகின்றன. -டி.ஐ.,யை விட +டி.ஐ., அதிகமாக இருப்பதும் மற்றும் ஏ.டி.எக்ஸ்., குறியீடும் டிரெண்டின் வலிமையை உறுதிப்படுத்துகின்றன.

அதேநேரம், ஆர்.எஸ்.ஐ., அடாப்டிவ் ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஸ்டோகாஸ்டிக் ஆகியவை 'ஓவர்பாட்' நிலையைக் காட்டுவதால், கிடைத்த லாபத்தை கையில் பெறும் நோக்கத்துடனான விற்பனையோ அல்லது 'கன்சாலிடேஷனோ' நடக்க வாய்ப்புள்ளது. 25,084 என்ற தடையை தாண்டினால், ஏற்றம் தொடரலாம். தற்போதைய டெக்னிக்கல் சூழலில் 24,894, 24,744 மற்றும் 24,650ல் சப்போர்ட்டும், 25,140, 25,234 மற்றும் 25,328ல் ரெசிஸ்டென்ஸும் உள்ளது.

மொத்தத்தில், ஏற்றத்துக்கான டெக்னிக்கல் சூழல் சற்று வலுவாக இருந்தாலும், சமீபத்தில் ஏற்பட்டுள்ள அதிக ஏற்றத்தை கருத்தில் கொண்டால் கன்சாலிடேஷன் நடப்பதற்கான வாய்ப்பே அதிகமாக தெரிகிறது.

இன்று மட்டும் வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள்

நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் | 9.11.26 இறுதி விலை | கவனிக்க வேண்டிய விலை | டெக்னிக்கல் சப்போர்ட் | டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் | டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்

ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26): -8.72 ஆர்.ஓ.சி.,: 7.54 ஆர்.எஸ்.ஐ.,: 51.01) | 459.00 | 455 | 447 | 465 | 2, 6

குஜராத் பிபாவவ் போர்ட் (எம்.ஏ.சி.டி.,(12,26): 0.48 ஆர்.ஓ.சி.,: 8.60 ஆர்.எஸ்.ஐ.,: 59.47) | 170.80 | 168 | 166 | 173 | 2, 5

ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26): 2.57 ஆர்.ஓ.சி.,: 10.36 ஆர்.எஸ்.ஐ.,: 61.79) | 960.00 | 953 | 949 | 970 | 2, 5, 6

என்.சி.சி., (எம்.ஏ.சி.டி.,(12,26): -1.29 ஆர்.ஓ.சி.,: 12.70 ஆர்.எஸ்.ஐ.,: 60.60) | 130.95 | 126 | 120 | 134 | 4, 6

பெடரல் பேங்க் (எம்.ஏ.சி.டி.,(12,26): 1.22 ஆர்.ஓ.சி.,: 0.94 ஆர்.எஸ்.ஐ.,: 55.78) | 344.10 | 337 | 330 | 348 | 5, 6

25,084 என்ற தடையை தாண்டினால் ஏற்றம் தொடரலாம்

Image 1643359



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us