sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ : எப் அண்டு ஓ., எக்ஸ்பைரி சார்ந்த நகர்வுகளை எதிர்பார்க்கலாம்

டெக்னிக்கல் அனாலிசிஸ : எப் அண்டு ஓ., எக்ஸ்பைரி சார்ந்த நகர்வுகளை எதிர்பார்க்கலாம்

டெக்னிக்கல் அனாலிசிஸ : எப் அண்டு ஓ., எக்ஸ்பைரி சார்ந்த நகர்வுகளை எதிர்பார்க்கலாம்


UPDATED : ஏப் 28, 2026 02:52 AM

ADDED : ஏப் 28, 2026 02:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 28, 2026 02:52 AM ADDED : ஏப் 28, 2026 02:51 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, தொடர்ந்து உயர்வு கண்டு, நாளின் இறுதியில் 194 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி 100' குறியீடு, குறைந்தபட்சமாக 0.91 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 2.41 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளும் உயர்வுடன் முடிந்தன. இவற்றில் 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு குறைந்தபட்சமாக 0.04 சதவீத உயர்வுடனும் , 'நிப்டி பார்மா' குறியீடு அதிகபட்சமாக 2.62 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.

Image 1570294


வர்த்தகம் நடந்த 3,447 பங்குகளில் 2,549 ஏற்றத்துடனும்; 800 இறக்கத்துடனும், 98 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டியில் நடக்கும் தற்காலிக ஏற்றத்தில், மொமெண்டம் இண்டிகேட்டர்களின் வலிமை குறைந்துள்ளது. 24,250ல் நல்லதொரு ரெசிஸ்டென்சும், 23,950ல் நல்லதொரு சப்போர்ட்டும் இருக்கிறது. தற்போதைய டெக்னிக்கல் சூழல், ரெசிஸ்டென்ஸை உடைத்து மேலே செல்லாத வரையில், நிப்டி இறங்குவதற்கான வாய்ப்பு கூடுதலாக இருக்கிற நிலைமையையே காட்டுகிறது. எனினும், செவ்வாயன்று எப்&ஓ எக்ஸ்பைரி இருப்பதால், டெக்னிக்கல் அனாலிசிஸ் கொண்டு கணிக்கப்படும் நகர்வுகள் நடக்காமல் போவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us