தரகர்களுக்கு புதிய விதிகள் அறிமுகம் செய்தது செபி
தரகர்களுக்கு புதிய விதிகள் அறிமுகம் செய்தது செபி
ADDED : ஜன 09, 2026 02:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பங்குச்சந்தை தரகர்களுக்கான 1992ம் ஆண்டு விதிகளுக்கு பதிலாக புதிய விதிகளை செபி அறிமுகம் செய்துள்ளது.
செபி ஒழுங்குமுறை விதிகளின் படி பழைய விதிகள் குறைக்கப்பட்டு, எளிமையாக்கப்பட்டு உள்ளன. இதன்படி. மற்ற நிதித்துறை ஒழுங்குமுறை அமைப்புகளின் கீழ் வரும் நிதிச்சேவைகளையும் பங்குத்தரகர்கள் வழங்கலாம். ஆனால், அந்தந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் வரம்புக்குள் அவரது செயல்பாடு அமையும். மின்னணு முறையில் கணக்குகளை பராமரிக்கலாம். தகுதி வாய்ந்த தரகர்களை கண்டறியும் அளவுகோல்களும் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய விதிகளின் கீழ், பங்குத்தரகர்களுக்கான விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், வணிகம் செய்வதும் எளிதாக்கப்பட்டுள்ளதாக செபி கூறியுள்ளது.

