sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சந்தை துளிகள்

 சந்தை துளிகள்

 சந்தை துளிகள்


UPDATED : ஏப் 09, 2026 02:02 AM

ADDED : ஏப் 09, 2026 01:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2026 02:02 AM ADDED : ஏப் 09, 2026 01:33 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அதிக முதலீடு வந்ததால் ஸ்ரீராம் பைனான்ஸ் உயர்வு



ஜ ப்பானின் 'எம்.யு.எப்.ஜி., வங்கி'க்கு 39,617 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஒதுக்கீடு செய்ய, 'ஸ்ரீராம் பைனான்ஸ்' நிறுவன இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது. இந்த வலுவான முதலீட்டு செய்தியால், இந்த நிறுவனத்தின் பங்கு விலை 11.26 சதவீதம் உயர்ந்து, நிப்டி 50 குறியீட்டில் அதிக லாபம் ஈட்டிய பங்காக உருவெடுத்தது.

Image 1560720




ஏற்றம் கண்ட எண்ணெய் நிறுவனங்கள்

போ ர் நிறுத்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 16 சதவீதத்துக்கும் மேல் சரிந்து, ஒரு பேரல் கிட்டத்தட்ட 92 டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் நேற்று கணிசமாக உயர்ந்தன.

விண்ணில் பறந்த விமான நிறுவன பங்குகள்

க ச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால், விமான எரிபொருள் செலவு குறையும் என்ற சாதகமான சூழலில், விமான நிறுவனங்களின் பங்குகள் பெரும் எழுச்சி கண்டன. 'இண்டிகோ' நிறுவன பங்கு 11 சதவீதம் வரை உயர்ந்தது. 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவன பங்கு 5 சதவீதம் அதிகரித்து, அதன் 'அப்பர் சர்க்யூட்' எல்லையை தொட்டது.

போனஸ் பங்கு அறிவிப்பால் எல்.ஐ.சி., உயர்வு

ப ங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு, முதல்முறையாக போனஸ் பங்குகள் வழங்குவது குறித்து ஆலோசிக்க ஏப்., 13ம் தேதி இயக்குநர் குழு கூட்டம் நடைபெறும் என எல்.ஐ.சி., அறிவித்துள்ளது. இந்த எதிர்பார்ப்பால் இதன் பங்கு விலை ஒரே நாளில் 6 சதவீதம் வரை உயர்ந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us