ADDED : டிச 23, 2025 01:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதிய வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 7.15 சதவீதமாக குறைப்பதாக, 'எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ்' நிறுவனம் நேற்று அறிவித்து உள்ளது.
ரிசர்வ் வங்கி, 'ரெப்போ' வட்டி விகிதத்தை சமீபத்தில் கால் சதவீதம் குறைத்தது. இதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதமாக, எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வீடு வாங்குவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த வட்டி குறைப்பு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்றும், இந்த வட்டி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

