ADDED : ஜன 26, 2026 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உ த்தர பிரதேசத்தைச் சேர்ந்த, 'டிரான்ஸ்பார்மர்' தயாரிப்பு நிறுவனமான, 'கனோஹர் எலக்ட்ரிக்கல்ஸ்', ஐ.பி.ஓ., வாயிலாக நிதி திரட்ட அனுமதி கேட்டு செபியிடம் வரைவு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.
புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 300 கோடி ரூபாயும்; நிறுவனர்களுக்கு சொந்தமான 1.45 கோடி பங்குகளை விற்பனை செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஐ.பி.ஓ., வெளியீட்டுக்கு முன்பாகவே 60 கோடி ரூபாய் திரட்டுவதற்கான திட்டமும் இதில் அடங்கும். புதிய இயந்திரங்கள் வாங்குவது, தொழிற்சாலை மேம்பாடு, அன்றாட செயல்பாட்டு தேவைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட இருக்கிறது.

