புற்றுநோய்க்கு பின் இன்சூரன்ஸ் பாதுகாப்பு கிடைக்குமா?
புற்றுநோய்க்கு பின் இன்சூரன்ஸ் பாதுகாப்பு கிடைக்குமா?
UPDATED : அக் 31, 2026 01:14 AM
ADDED : அக் 30, 2026 10:32 PM

ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு ஆஸ்பத்திரி செலவு பாலிசிகளில் காத்திருப்பு காலம் உண்டு என்பது நமக்கு தெரியும். உடல்நல பிரச்னைகளை பொறுத்து, புதிய பாலிசி வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் மறுக்கவும் வாய்ப்புள்ளது.
அக்டோபர் 26ம் தேதி வெளியான 'நிழலா? நிஜமா?' பகுதியில், புற்றுநோய் சிகிச்சைக்கான செலவுகளை சமாளிக்க, வழக்கமான ஆஸ்பத்திரி செலவு பாலிசி உட்பட வெவ்வேறு வகையான இன்சூரன்ஸ் பாதுகாப்புகளை எப்படி இணைத்துக் கொள்ளலாம் என்று பார்த்தோம். ஆனால், ஏற்கனவே புற்றுநோய் வந்து சிகிச்சை பெற்றவர்களுக்கு இனசூரன்ஸ் கிடைக்குமா?
பாதுகாப்பு
புற்றுநோயில் இருந்து மீண்ட நண்பர் ஒருவர், இதற்காக முயற்சி செய்தும் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று கூறினார். வேறு வழியே இல்லையா என்ற கேள்வி எழுந்தது. அதற்கான பதிலை தேட தொடங்கினேன். ஆனால், எந்த வகையான புற்றுநோய், சிகிச்சை முடிந்து எவ்வளவு காலமாகிறது, நோய் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதா, இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிபந்தனைகள் என்ன போன்ற விஷயங்களைப் பொறுத்தே பாலிசி கிடைக்கும் என்கிற நம்பிக்கை அளிக்கும் பதில் கிடைத்தது.
இங்கே ஒரு முக்கியமான வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். புற்றுநோய் வந்தவருக்கு பாலிசி வழங்கிவிட்டு, புற்றுநோய் தொடர்பான சிகிச்சை செலவுகளை மட்டும் நிரந்தரமாக விலக்கி வைப்பது ஒரு வகை. எதிர்காலத்தில் புற்றுநோய்க்காக மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர நேரிட்டாலும், அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வது இன்னொரு வகை. எந்த பாதுகாப்பு கிடைக்கிறது என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.
' அண்டர்ரைட்டிங்'
இதற்கு சில வழிகள் உள்ளன. முதலாவது, வழக்கமான ஆஸ்பத்திரி செலவு பாலிசி. புற்றுநோய் வந்தவர் விண்ணப்பித்தால், நிறுவனம் கட்டாயம் பாலிசி வழங்க வேண்டும் என்பதில்லை. அதே நேரத்தில், விண்ணப்பத்தை உடனடியாக நிராகரித்துவிடும் என்றும் சொல்ல முடியாது. புற்றுநோயின் வகை, அது கண்டறியப்பட்ட நிலை, அளிக்கப்பட்ட சிகிச்சை, நோய் மீண்டும் தோன்றாமல் எவ்வளவு காலம் கடந்துள்ளது, தற்போதைய உடல்நிலை போன்றவற்றை ஆராய்ந்து நிறுவனம் முடிவெடுக்கும். இதைத்தான் 'அண்டர்ரைட்டிங்' என்கிறோம்.
இரண்டாவது, ஏற்கனவே புற்றுநோய் வந்தவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட பாலிசிகள். ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் 'கேன்சர் கேர் பிளாட்டினம்' இதற்கு ஓர் உதாரணம்.
மூன்றாவது வழி மிகவும் முக்கியமானது. புற்றுநோய் வருவதற்கு முன்பே எடுத்த பாலிசி ஏதேனும் இருக்கிறதா என்று பாருங்கள்.
அப்படி ஒரு பாலிசி இருந்தால், அதை அலட்சியமாக விட்டுவிடாதீர்கள். உரிய காலத்தில் பிரீமியம் செலுத்தி, தொடர்ந்து புதுப்பித்து வாருங்கள். நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாழ்நாள் முழுதும் பாலிசியை புதுப்பித்துக் கொள்ளும் உரிமை பாலிசிதாரருக்கு இருக்கிறது.
அதை ரத்து செய்வதோ, வேறு நிறுவனத்துக்கு மாற்றுவதோ, புதுப்பிக்க தவறுவதோ பெரிய இழப்பை ஏற்படுத்தலாம். வேறு நிறுவனத்துக்கு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தற்போதுள்ள பாதுகாப்பும் புதிய பாலிசியின் நிபந்தனைகளும் எப்படி மாறும் என்பதை முதலில் ஆராய வேண்டும்.
இது புற்றுநோய் வந்தவர்களுக்கு மட்டுமான அறிவுரை அல்ல. பெரிய உடல்நல பிரச்னையை சந்தித்த அனைவருக்கும் பொருந்தும். அந்த நோய்க்காக இன்சூரன்ஸ் கிளெய்ம் செய்திருந்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி.
கவரேஜ்
இப்போது கேன்சர் கேர் பிளாட்டினம் பாலிசியை சற்று பார்ப்போம். ஏற்கனவே புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த பாலிசி, புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கான தகுதியுள்ள ஆஸ்பத்திரி செலவுகளை ஈடு செய்கிறது. 5 லட்சம் ரூபாய், 7.5 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய் ஆகிய காப்பீட்டு தொகைகளில் கிடைக்கிறது.
ஏற்கனவே உள்ள நோய்களுக்கு, புற்றுநோய் உட்பட, 30 மாத காத்திருப்பு காலம் உண்டு. புற்றுநோய் மீண்டும் தோன்றினாலோ, வேறு உறுப்புகளுக்கு பரவினாலோ, வேறொரு புற்றுநோய் ஏற்பட்டாலோ மொத்தமாக, ஒரு தொகை வழங்கும் கூடுதல் பாதுகாப்பையும் கூடுதல் பிரீமியம் செலுத்தி பெறலாம். இதற்கும் தனி நிபந்தனைகள் உள்ளன.
61 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் பாலிசியை வாங்குபவர்கள் அல்லது புதுப்பிப்பவர்கள், ஒவ்வொரு கிளெயிம் தொகையிலும் 10 சதவீதத்தை தாங்களே ஏற்க வேண்டும். இதை 'கோ-பேமென்ட' என்பார்கள். நீண்ட காலத்தில் சிகிச்சை செலவுகளை சமாளிக்க திட்டமிடும்போது இதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வரம்புகள்
என்னை பொறுத்தவரை இது பெரிய தடையாக இருக்க வேண்டியதில்லை. ஒரு மருத்துவ செலவில் 10 சதவீதத்தை செலுத்துவதே சிரமமாக இருந்தால், இன்சூரன்ஸ் இல்லாமல் 100 சதவீதத்தையும் செலுத்துவது எவ்வளவு கடினமாக இருக்கும். இந்த பாலிசியில் வலி நிவாரணச் சிகிச்சைக்கும் குறிப்பிட்ட வரம்புக்குள் பாதுகாப்பு உண்டு. மேலும், நோய் மிகவும் முற்றிய நிலையில் உள்ள புற்றுநோயாளிகளுக்கான ஆதரவு பராமரிப்பு செலவுகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
எந்த பாலிசியை தேர்ந்தெடுத்தாலும், ஒரு விஷயத்தை மறக்காதீர்கள். முன்பு வந்த அதே புற்றுநோய் மீண்டும் ஏற்பட்டால் சிகிச்சை செலவுகள் வழங்கப்படுமா என்பதை நிறுவனத்திடம் எழுத்துப்பூர்வமாக கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
காத்திருப்பு காலத்துக்கு பிறகு பாதுகாப்பு கிடைக்கலாம். சில நிபந்தனைகளுடன் கிடைக்கலாம். அல்லது அந்த சிகிச்சை நிரந்தரமாக விலக்கப்பட்டிருக்கலாம். இதை பாலிசி வாங்கும்போதே தெரிந்துகொள்வது அவசியம்.
புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கு இன்சூரன்ஸ் கிடைக்காது என்று முடிவுகட்ட வேண்டாம். நோயிலிருந் 

