தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ.,


ADDED : செப் 04, 2026 03:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 03:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பிரசோல் கெமிக்கல்ஸ்'

வே திபொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், 'பிரசோல் கெமிக்கல்ஸ்' நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

இதில், 80 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளும், 420 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் 'ஆபர் பார் சேல்' முறையிலும் வெளியிடப்பட உள்ளன.

புதிய பங்கு வெளியீடு வாயிலாக திரட்டப்படும் நிதி, நிறுவனத்தின் கடன்களை அடைக்கவும், மூலதன தேவைகள் மற்றும் பிற செயல்பாடுகளுக்காகவும் செலவிடப்பட உள்ளது.

தொடங்கும் தேதி : செப்., 8, 2026

முடியும் தேதி : செப்., 10, 2026

பங்கு விலை வரம்பு : ரூ.643 - ரூ.676

'கிளாஸ் வால் சிஸ்டம்ஸ் (இந்தியா)'

க ட்டிட முகப்பு கட்டமைப்பில் ஈடுபட்டு வரும், 'கிளாஸ் வால் சிஸ்டம்ஸ் (இந்தியா)' நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டு வாயிலாக 428 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

இதில், 60 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளும், 2.02 கோடி பங்குகள் 'ஆபர் பார் சேல்' முறையிலும் வெளியிடப்பட உள்ளன. புதிய பங்கு வெளியீடு வாயிலாக திரட்டப்படும் நிதியில், 50 கோடி ரூபாய் மகாராஷ்டிராவில் உள்ள ஆலை விரிவாக்கம் மற்றும் கண்ணாடி பதப்படுத்தும் பிரிவு அமைப்பதற்கும், மீதமுள்ள நிதி இதர தேவைகளுக்கும் செலவிடப்பட உள்ளது.

தொடங்கும் தேதி : செப்., 8, 2026

முடியும் தேதி : செப்., 10, 2026

பங்கு விலை வரம்பு : ரூ.172 - ரூ.182

'கனோஹர் எலக்ட்ரிக்கல்ஸ்'

மி ன்மாற்றி தயாரிப்பில் ஈடுபட்டு வரும், 'கனோஹர் எலக்ட்ரிக்கல்ஸ்' நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 1,056 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

இதில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளும், 756 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் 'ஆபர் பார் சேல்' முறையிலும் வெளியிடப்பட உள்ளன.

புதிய பங்கு வெளியீடு வாயிலாக திரட்டப்படும் நிதி, ஆலையின் மூலதன செலவுகள், புதிய இயந்திரங்கள் வாங்குதல், செயல்பாட்டு மூலதன தேவைகள் மற்றும் இதர தேவைகளுக்காக செலவிடப்பட உள்ளது.

தொடங்கும் தேதி : செப்., 8, 2026

முடியும் தேதி : செப்., 10, 2026

பங்கு விலை வரம்பு : ரூ.601 - ரூ.632

'ஏ.ஆர்.சி.ஐ.எல்.,'

வ ங்கி கடன் வசூல் உள்ளிட்ட சொத்து மறுசீரமைப்பில் ஈடுபட்டு வரும், 'ஏ.ஆர்.சி.ஐ.எல்.,' நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 733 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

இந்த வெளியீடு முழுதும், 'ஆபர் பார் சேல்' முறையில் நடைபெறுகிறது. இதில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பெடரல் வங்கி உள்ளிட்ட புரமோட்டர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வசம் உள்ள 5.27 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

தொடங்கும் தேதி : செப்., 9, 2026

முடியும் தேதி : செப்., 11, 2026

பங்கு விலை வரம்பு : ரூ.132 - ரூ.139

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us