sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஐ.பி.ஓ

ஐ.பி.ஓ

ஐ.பி.ஓ


ADDED : நவ 07, 2025 06:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2025 06:49 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டென்னெகோ க்ளீன் ஏர் இந்தியா


'டென்னெகோ க்ளீன் ஏர் இந்தியா' நிறுவனம், நவ., 12ல் துவங்கும் ஐ.பி.ஓ., வாயிலாக, 3,600 கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.இந்நிறுவனத்தின் முதலீட்டாளர் என்ற அடிப்படையில், 'டென்னெகோ மொரீஷியஸ் ஹோல்டிங்ஸ்' நிறுவனம் முழு தொகைக்குமான பங்குகளை ஐ.பி.ஓ.,வில் விற்கிறது. ஆபர் பார் சேல் வாயிலாக முழு தொகையும் திரட்டப்படுவதால், இந்நிறுவனத்திற்கு புதிய நிதி எதுவும் கிடைக்காது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட டென்னெகோ குழுமத்தைச் சேர்ந்த இந்நிறுவனம், வாகனங்களுக்குத் தேவையான காற்று சுத்திகரிப்பான், சஸ்பென்ஷன் போன்ற முக்கிய உதிரிபாகங்களை உற்பத்தி செய்கிறது.

எஸ்.பி.ஐ., பண்ட்ஸ் மேனேஜ்மென்ட்



ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தனது துணை நிறுவனமான 'எஸ்.பி.ஐ., பண்ட்ஸ் மேனேஜ்மென்ட்' நிறுவனத்தில் 6.30 சதவீத பங்குகளை புதிய பங்கு வெளீயிடு வாயிலாக விற்பதற்கு நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது. 'எஸ்.பி.ஐ., பண்ட்ஸ் மேனேஜ்மென்ட்' நிறுவனத்தின் மற்றொரு முதலீட்டாளரான 'அமுண்டி இந்தியா ஹோல்டிங்' நிறுவனம், 3.70 சதவீத பங்குகளை விற்பனை செய்கிறது. இதற்கான ஒப்பந்தம் நவ., 10ல் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.பி.ஐ.,யின் துணை நிறுவனங்களில் 'எஸ்.பி.ஐ., கார்ட்ஸ், எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ்' ஆகிய நிறுவனங்களுக்கு பின் பட்டியலிடப்பட உள்ள மூன்றாவது நிறுவனம் இதுவாகும்.

எம்வீ போட்டோவோல்டாயிக் பவர்


புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கும் 'எம்வீ போட்டோவோல்டாயிக் பவர்' நிறுவனத்தின் பங்கு விலை 206 முதல் 217 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் 2,900 கோடி ரூபாய் நிதி திரட்டுவதாக அறிவித்துள்ளது. ஐ.பி.ஓ.,வில் பங்குகளை வாங்க விரும்புபவர்கள் நவ., 11 முதல் 13 வரை விண்ணப்பிக்கலாம். இந்நிறுவனம் நவ., 18ல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் செயல்படும்

இந்நிறுவனம், சூரிய சக்தி பேனல்கள், செல்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us