UPDATED : ஜன 09, 2026 02:03 AM
ADDED : ஜன 09, 2026 02:01 AM

அமாஜி மீடியா லேப்ஸ் பங்கு விலை நிர்ணயம்
![]() |
பெ ங்களூரை தலைமைஇடமாக கொண்ட கிளவுடு அடிப்படையிலான ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளை வழங்கி வரும் அமாஜி மீடியா லேப்ஸ், 1,788.62 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, வரும் 13ம் தேதி புதிய பங்கு வெளியீடுக்கு வரவுள்ளது. இதில், 816 கோடி ரூபாயும், ஆரம்ப முதலீட்டாளர்கள் பங்குகள் விற்பனை வாயிலாக 972.62 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதற்காக, பங்கு ஒன்றின் விலை 343 - 361 ரூபாயாக நிர்ணயித்து உள்ளது. சில்லரை முதலீட்டாளர்கள், பங்கு கேட்டு விண்ணப்பிக்க வரும் 16ம் தேதி கடைசி நாளாகும். வரும் 21ம் தேதி, பங்குச்சந்தையில் இந்நிறுவன பங்குகள் பட்டியலிடப்பட உள்ளன.
'இந்தாண்டு பங்கு வெளியீடு ரூ.2.50 லட்சம் கோடியை எட்டும்'
ஐ. பி.ஓ., சந்தை இந்தாண்டு 32 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2.50 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை எட்டும் என கோட்டக் இன்வெஸ்ட்மென்ட் வங்கி கணித்துள்ளது. மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது:
இந்திய சந்தைகளில், ஐ.பி.ஓ., கடந்த ஆண்டு 13 சதவீதம் வளர்ச்சி கண்டு 1.89 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை திரட்டி இருந்தது. இந்தாண்டு ஐ.பி.ஓ.,வரும் நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமாக இருக்கும். எனினும், ஒட்டுமொத்த பங்கு மூலதன சந்தை நடவடிக்கை, 18 சதவீதம் சரிந்து 5.10 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதில், பெரிய டீல்கள் மற்றும் தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கான பங்குகள் ஒதுக்கீடும் அடங்கும்.
ரூ.700 கோடி திரட்ட வருகிறது ஐ.ஜி.எக்ஸ்.,
![]() |
இ ந்தியாவின் முதல் ஆன்லைன் இயற்கை எரிவாயு வர்த்தக தளமான ஐ.ஜி.எக்ஸ்., இந்தாண்டு டிசம்பருக்குள் புதிய பங்கு வெளியீடுக்கு வரும் என, அதன் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் குமார் மெடிரட்டா தெரிவித்துள்ளார்.
தற்போது, இந்திய எனர்ஜி எக்ஸ்சேஞ் எனப்படும் ஐ.இ.எக்ஸ்., நிறுவனம் வசம், ஐ.ஜி.எக்ஸ் நிறுவனத்தின் 47 சதவீத பங்குகள் உள்ளன. விதிமுறைகளின் படி, இதை 25 சதவீதமாக குறைக்க உள்ளது.
இதன்படி, 22 சதவீத பங்குகள் விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட இதன் மதிப்பு 600 -- 700 கோடி ரூபாய்.



