ADDED : ஏப் 03, 2026 01:32 AM

'சாய் பேரென்டரல்ஸ்'
ஹை தராபாதை தலைமையிடமாக கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான 'சாய் பேரென்டரல்ஸ்' நிறுவனத்தின் பங்கு நேற்று பி.எஸ்.இ.,யில் 405 ரூபாய்க்கு பட்டியலானது. இது, இந்நிறுவனத்தின் ஐ.பி.ஓ., வெளியீட்டு விலையான 392 ரூபாயை விட 3.32 சதவீதம் அதிகமாகும். என்.எஸ்.இ.,யில் 2.04 சதவீத உயர்வுடன் 400 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டன. வர்த்தக முடிவில் இதன் பங்கு விலை என்.எஸ்.இ.,யில் 1.25 சதவீத உயர்வுடன் 405 ரூபாய்க்கு வர்த்தகமானது.
'அமிர் சந்த்'
பா ஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யும் 'அமிர் சந்த் ஜகதீஷ் குமார் எக்ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தின் பங்குகள் நேற்று பி.எஸ்.இ.,யில் அதன் ஐ.பி.ஓ., வெளியீட்டு விலை 212 ரூபாயை விட 8 சதவீதம் குறைந்து 195 ரூபாய்க்கு பட்டியலானது. வர்த்தக முடிவில் வெளியீட்டு விலையை விட 17.22 சதவீதம் சரிந்து, 175.50 ரூபாயாக இருந்தது.
