sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : மார் 16, 2026 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 01:11 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அப்பு: போன வாரம் என்ன சப்போர்ட்டோ என்ன ரெசிஸ்டென்ஸோன்னு சலிச்சுகிட்டு போனாரு நியுட்ரன். சப்போர்ட்டே இல்லாம இறக்கிகிட்டே இருக்கீங்களே டவுனு.

டவுன்: அதுதான் போரும் போரோட விளைவும். எனக்கே பயமா இருந்துச்சு.

அப்பு: எங்கேதான் போய் நிறுத்துவீங்க டவுனு.

டவுன்: அவங்களை நிறுத்த சொல்லு. நான் நிறுத்தறேங்கிறதுதான் இப்ப நிலைமையே!

அப்பு: நல்லா சொல்றீங்க. எங்களை மாதிரி ஆளுக்கெல்லாம் பதறுதுல்ல சார்.

டவுனு: நியுட்ரன்னு ஒரு கேரெக்டர் இருந்துச்சே. அது சத்தத்தையே காணோம்.

நியுட்ரன்: உங்களுக்கே பயமும் பதற்றமும் வந்துச்சுன்னா நானெல்லாம் பதுங்கு குழியிலதான் போய் பதுங்கிக்கணும்.

டவுனு: கொஞ்ச நாளைக்கு முன்னாடி எனக்கு அனுபவம் அதிகமுன்னு சவடால் விட்டீங்க.

நியுட்ரன்: இது எது மாதிரியும் இல்லாத புது மாதிரி விளைவுகளை உருவாக்குற போரால்ல இருக்குது.

டவுனு: வர்ற வாரத்துல மொத்தவிலை குறியீடு அடிப்படையிலான பண வீக்கம், வேலையில்லா திண்டாட்டம், பேலன்ஸ் ஆப் டிரேட், வங்கிகள் வழங்கிய கடன் மற்றும் அவற்றில் இருக்கும் டிபாசிட்டின் அளவில் வளர்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு, இன்ப்ராஸ்ட்ரக்சர் அவுட்புட் போன்ற இந்திய பொருளாதார தரவுகள் வெளிவர இருக்கு.

இண்டஸ்ட்ரீயல் ப்ரொடக்ஷன், வீடுகள் விற்பனை, உற்பத்தியாளர்கள் விலை குறியீடு, பேக்டரி ஆர்டர்கள், பெடரல் ரிசர்வின் வட்டிவிகித முடிவுகள் போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகள் வெளிவர இருக்குது.

அப்பு: இந்த வாரம் நிப்டியோட டெக்னிக்கல் சப்போர்ட் 22871 / 22741 / 22330 போன்ற லெவல்களிலேயும், ரெசிஸ்டென்ஸ் 23392 / 23778 / 23933 போன்ற லெவல்களிலேயும் இருக்குது. அமெரிக்க வட்டிவிகித முடிவு வேற இருக்குது. கவனம் தேவை.

நியுட்ரன்: அப்புவும்தான் சளைக்காம சப்போர்ட் ரெசிஸ்டென்ஸ் சொல்றாரு. இந்த வாரமாவது ஏதாவது ஒர்க் அவுட் ஆனா நல்லாயிருக்கும்.

டவுனு: வர்ற வாரம் கொஞ்சம் நிலைமை சீரடைய வாய்ப்பிருக்க மாதிரி தெரியுது.

நியுட்ரன்: சூப்பர்.

டவுனு: கொஞ்சமுன்னு சொன்னேன். உடனே சூப்பருன்னா என்ன அர்த்தம்.

அப்பு: இப்படி ஓவர் உற்சாகமாகுறது. அப்புறம் பதுங்கு குழிக்கு போறேங்கிறது. உங்க கேரெக்டரையே புரிஞ்சுக்க முடியலை நியுட்ரன்.

நியுட்ரன்: உற்சாகம் பயமெல்லாம் பேச்சுலதாங்க. செயல்ல இருக்கவே இருக்காது. அதனாலதான் என் பேரு நியுட்ரன்.

டவுனு: இந்த விளக்கம் நல்லா இருக்கே.

நியுட்ரன்: நீங்க ரெண்டு பேரும் ஒரு சைடு எடுத்து அதுல தைரியமா உறுதியா நிக்குறீங்க.. நான் அப்படியில்லை. ஆசை மட்டுமே உண்டு. ஆக் ஷன் கிடையவே கிடையாது.

அப்பு: பேச்சு சுவாரஸ்யத்துல வர்ற வாரம் குறித்த எதிர்பார்ப்பை சொல்லவேயில்லையே.

டவுனு: எதிர்பாராததை எதிர்பாருங்கள்

நியுட்ரன்: அப்படீன்னா?

அப்பு: எனக்கு சின்ன வாய்ப்பு கிடைக்குமுன்னு சொல்லாம சொல்றார் டவுனு.

டவுனு: கரெக்டா என் பாயின்ட்டை கேட்ச் பண்ணீட்டீங்க.

நியுட்ரன்: நானும் எவ்வளவு நாள்தான் வேடிக்கை பார்க்குறது. ஏதாவது வியாபாரம் பண்ணட்டா.

டவுனு: ஓரிரு நாட்கள் ஓப்பனிங்தான் நல்லா இருக்கும். நாளுக்கு இடையில உங்க ராஜ்ஜியமா இருக்க வாய்ப்பிருக்கு.

நியுட்ரன்: அது கூட ஓகே தான். ஒன்னு நான் ஏதாவது வியாபாரம் பண்ணனும். இல்லை சந்தை என் பிடியில இருந்துச்சுன்னு நீங்க பாராட்டனும். அதுவே எனக்கு போதும்.

அப்பு: நியுட்ரனோ இந்த மொக்கையான பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு அமைதியா இருக்கற நிலைமையில நான் இருக்கேன் பார்த்தீங்களா. ரொம்ப பீலிங்கா இருக்குது.

டவுனு: ரொம்ப பீல் பண்ணாதீங்க. நல்லது நடக்கும்.

அப்பு: உங்க வாயில சர்க்கரையை போட. வாங்க போய் ஏதாவது ஸ்வீட் சாப்பிடலாம் என்று அழைக்க மூவரும் ஸ்வீட் சாப்பிட கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us