UPDATED : அக் 18, 2026 12:00 AM
ADDED : அக் 17, 2026 10:24 PM

உ லக சந்தையில் மீண்டும் தங்கம், வெள்ளி விலைகள் ஏற்றம் காண தொடங்கியுள்ளன. பலவீனமடைந்த அமெரிக்க டாலர் மற்றும் 3 வார குறைந்தபட்ச அளவை எட்டியுள்ள அமெரிக்க பத்திரங்களின் வட்டி ஆகியவை விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
நேற்று முன்தின வர்த்தகத்தில், ‘காமெக்ஸ்’ சந்தையில் ஒரு அவுன்ஸ் (31.10 கிராம்) தங்கம் 4,200 டாலருக்கு வர்த்தகமானது. ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு முதல்முறையாக 4,100 டாலருக்கு கீழ் சரிந்திருந்த தங்கம், தற்போது உயர்ந்துள்ளது. அதே போல வெள்ளி சற்று வேகமாக உயர்ந்து, 57.85 டாலர் என்ற விலையில் வர்த்தகமாகிறது. தங்கம்–வெள்ளி விகிதம் தற்போது 73 ஆக குறைந்துள்ளது. இது வெள்ளியின் பலத்தை காட்டுகிறது. எம்.சி.எக்ஸ்., சந்தையில் 10 கிராம் தங்கம் 1.47 லட்சம் ரூபாய் என்ற அளவிலும், வெள்ளி கிலோவுக்கு 2.11 லட்சம் ரூபாய் என்ற அளவிலும் வர்த்தகமானது.
