தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/துளிகள்

துளிகள்

துளிகள்


UPDATED : அக் 27, 2026 12:00 AM

ADDED : அக் 26, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 12:00 AM ADDED : அக் 26, 2026 11:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொடக்க வர்த்தகத்தில்

சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு

நே ற்று பங்கு சந்தை தொடக்க வர்த்தகத்தில் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்தது. சர்வதேச அரசியல் சூழல்களாலும், இந்த வாரம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகள் வெளியாக இருப்பதாலும், அதன் தாக்கம் பங்கு சந்தையில் பிரதிபலித்துள்ளது. இருப்பினும், வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 482 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

ஸ்ரீராம் பைனான்ஸ் பங்கு

11 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி

மு ன்னணி நிதி நிறுவனமான ‘ஸ்ரீராம் பைனான்ஸ்’ வணிகத்துக்கு ஏற்பட்டுள்ள சவால்களால், நிர்வாகத்தில் உள்ள சொத்து மதிப்பு வளர்ச்சிக்கான கணிப்பை 15- – 17 சதவீதமாக குறைத்துள்ளது. இதனால், ஸ்ரீராம் பைனான்ஸ் பங்கு விலை கடந்த இரண்டு தினங்களில் 10 சதவீதம் இறங்கி 810 ரூபாயை தொட்டு உள்ளது. இது 11 மாதங்களில் இல்லாத சரிவு விலை ஆகும்.

53 சதவீதம் குறைந்த

‘இ – முத்ரா’ பங்கு விலை

இ ந்தியாவின் முன்னணி டிஜிட்டல் சான்றிதழ் வழங்கும் நிறுவனமான ‘இ – முத்ரா’ நிறுவனத்தின் பங்கு விலை, பங்கு சந்தையில் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. நேற்றைய வர்த்தகத்தில் மேலும் 10 சதவீதம் சரிந்து, தனது 52 வார புதிய சரிவான 318 ரூபாய் என்ற நிலையை தொட்டது.

கடந்த செப்டம்பர் 16, 2026 அன்று பதிவு செய்த 677.50 என்ற உச்சத்திலிருந்து, இதன் பங்கு விலை தற்போது 53 சதவீதம் வரை சரிந்துள்ளது. கடந்த ஐந்து வர்த்தக தினங்களில் மட்டும் இப்பங்கு 43% சரிவை சந்தித்துள்ளது. மலிவாக கிடைக்கிறது என்பதற்காக மட்டுமே சிறு முதலீட்டாளர்கள் அவசரப்பட்டு இந்த பங்கை வாங்க வேண்டாம். தொழில்நுட்ப சிக்கல்கள், பிராண்டு மதிப்பு பாதிப்பு மற்றும் மத்திய அரசின் விசாரணை முடிவுகள் வெளிவரும் வரை காத்திருப்பதே பாதுகாப்பானது என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

என்ன காரணம்?



 கடந்த அக்டோபர் 21ம் தேதி அன்று, இந்நிறுவனம் தனது உலகளாவிய ‘டி.எல்.எஸ்.,’ சான்றிதழ் பிரிவில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக பங்கு சந்தைகளுக்கு தெரிவித்தது

 ‘கூகுள் மற்றும் பயர்பாக்ஸ்’ ஆகியவை இந்நிறுவனத்தின் இடைநிலை சான்றிதழ்களை தடை செய்தது

 அக்டோபர் 27ம் தேதி முதல் ‘கூகுள் குரோம்’ பிரவுசரில் இருந்து இமுத்ராவின் 'இ.எம்.சைன் ரூட் சி.ஏ.,’ சான்றிதழ் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது

 இனி தங்களது முதன்மை தொழிலில் மட்டும் கவனம் செலுத்த போவதாகவும் இந்நிறுவனம் அக்டோபர் 22 அன்று அறிவித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us