ADDED : டிச 19, 2025 01:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, சென்னை பெருநகர மாநகராட்சி, 205 கோடி ரூபாய் அளவுக்கு பசுமை பத்திரங்களை வெளியிட செபியிடம் விண்ணப்பித்து உள்ளது. ஒரு கடன் பத்திரத்தின் விலை 7 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 2,937 பத்திரங்கள் வெளியிட திட்டமிட்டுள்ளது. இது பொதுமக்களுக்கான முதலீடு திட்டம் அல்ல. பெரிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கானது ஆகும்.
முதலீடு செய்பவர்களுக்கு மாநகராட்சி குறிப்பிட்ட வட்டியுடன் அசலை திருப்பித் தரும். பசுமை பத்திரங்கள் என்.எஸ்.இ.,யில் பட்டியலிடப்படும் என விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.

