உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 24, 2026 12:58 AM

அ நிறம் | அளவு
க ச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இந்தியாவின் 10 ஆண்டுகால அரசு கடன் பத்திரங்களின் வட்டி விகிதங்கள், நேற்று 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகும் 10 ஆண்டுகால கடன் பத்திரங்களின் வட்டி வருவாய், 6.82 சதவீதமாக அதிகரித்துள்ளது. முன்னதாக, கடந்த 2025ம் ஆண்டு ஜன., 14ம் தேதி இதே அளவுக்கு வட்டி வருவாய் அதிகரித்து இருந்தது.
இதன் காரணமாக, கடந்த ஜன., மற்றும் பிப்., மாதங்களில் கடன் பத்திரங்களை வாங்கிய வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், தற்போது விற்பனையாளர்களாக மாறி வருவதாக 'அரேட்டே கேபிடல்' நிறுவனத்தின் துணை தலைவர் மாதாபிரசாத் பாண்டே தெரிவித்து உள்ளார்.
