ADDED : நவ 30, 2024 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:வெளிநாடுகளில் இருந்து கார்கள் இறக்குமதி செய்ததில், 11,760 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, 'போக்ஸ்வேகன்' நிறுவனத்துக்கு, மஹாராஷ்டிரா சுங்க வரி ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்நிறுவனம், வரியை குறைவாக கட்டும் வகையில், முழு காராக இறக்குமதி செய்யாமல், காருக்கு தேவையான அத்தனை பாகங்களையும், உதிரி பாகங்களாக இறக்குமதி செய்துள்ளது.
இந்த வகையில், 30 - 35 சதவீதம் வரி செலுத்துவதற்கு பதிலாக, உதிரிபாகங்களாக குறிப்பிட்டு, 5 - 15 சதவீதம் மட்டுமே வரி செலுத்தி உள்ளது. இதனால், அரசுக்கு கிட்டத்தட்ட 11,760 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது என, குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

