ADDED : ஜூலை 31, 2025 01:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில விதிமுறைகளை, செபி நீக்கி உள்ளது.
இதன்படி கிளியரிங் உறுப்பினர்களின் பெயர்களை கட்டாயமாக அறிவிக்கும் அல்லது கஸ்டோடியல் பார்ட்டிசிபன்ட் குறியீட்டைப் பெறும் தேவையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி உள்நாட்டு முதலீட்டாளர்களை போன்று, வெளிநாடு வாழ் இந்தியர்களும் தங்கள் ஒப்பந்த நிலைகளை நேரடியாக கண்காணிக்க இயலும்.

