sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள்

 எண்கள்

 எண்கள்


ADDED : பிப் 14, 2026 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 01:15 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

400


'டா பர் இந்தியா' நிறுவனம், தென் மாநிலங்களில் தனது முதல் ஆலையை தமிழகத்தில் அமைக்கிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமையவுள்ள இந்த தொழிற்சாலையில் 400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

இந்த ஆலையின் வாயிலாக 250க்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்பும், ஆயிரக்கணக்கானோருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு டூத் பேஸ்ட், கூந்தல் தைலம் உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

5.79




இ ந்தியாவின் நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி, கடந்த ஜனவரி மாதத்தில் 5.79 சதவீதம் சரிந்துள்ளதாக, அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டு ஜனவரியில் 21,622 கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி, நடப்பாண்டு ஜனவரியில் 20,371 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக, நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முக்கிய சந்தையான அமெரிக்காவில் வரி உயர்த்தப்பட்டதால், அந்நாட்டுக்கான ஏற்றுமதி 45 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

75


நி றுவனங்களை கையகப்படுத்துவதற்காக வங்கிகள் வழங்கும் கடன் வரம்பு 75 சதவீதமாக உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது முன்பு தெரிவிக்கப்பட்டிருந்த 70 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

இதுதொடர்பான இறுதி வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி, கையகப்படுத்தப்படும் மொத்த மதிப்பில் 75 சதவீதம் வரை வங்கிகள் கடன் வழங்கலாம்.

மீதமுள்ள தொகை அந்த நிறுவனத்தின் சொந்த நிதியாதாரமாக இருக்க வேண்டும். மேலும், கடன் மற்றும் பங்கு விகிதம் 3:1 என்பதற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us