sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள்

 எண்கள்

 எண்கள்


ADDED : நவ 30, 2025 02:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 02:05 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

6,650

வி ருந்தோம்பல் வணிகத்தில் ஈடுபட்டு வரும் 'ஓயோ'வின் தாய் நிறுவனமான பிர்ஸ்ம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 6,650 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது.

இதற்கு பங்குதாரர்களிடம் ஒப்புதல் கோருவதற்காக, அடுத்த மாதம் 20ம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டியுள்ளது. மேலும், போனஸ் பங்குகள் வழங்குவது தொடர்பாகவும் ஓட்டெடுப்பு நடத்த உள்ளதாக, பங்குதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2

'ட் ரோன் ஆச்சாரியா ஏரியல் சொல்யூஷன்ஸ்' நிறுவனம் மற்றும் இதன் இரண்டு நிறுவனர்களுக்கு பங்குச்சந்தையில் ஈடுபட, செபி இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதித்து உள்ளது.

ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டிய நிதியை தவறாக பயன்படுத்தியது மற்றும் போலியாக பங்கு விலையை உயர்த்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் மொத்தம் 75 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.இ., - எஸ்.எம்.இ., தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இந்நிறுவனம், கடந்த 2022ல் ஐ.பி.ஓ., வாயிலாக 33.96 கோடி ரூபாய் நிதி திரட்டியது.

50

மை க்ரோ பைனான்ஸ் எனும் நுண்கடன் துறையில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையால், கிட்டத்தட்ட 50 லட்சம் வாடிக்கையாளர்கள் முறையான கடன் பெறும் வாய்ப்பை இழந்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆறாவது காலாண்டாக கடந்த செப்டம்பர் காலாண்டிலும் கடன் வழங்குவது குறைந்துள்ளதாக, 'எம்பின்' எனும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு செப்டம்பர் காலாண்டில், இத்துறை வழங்கிய கடன் மதிப்பு 16.80 சதவீதம் சரிந்து, 3.40 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us