
1,76,000
இ ந்தியாவில் இருந்து அமேசான் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு 1.76 லட்சம் கோடி ரூபாயை தாண்டி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, ஆரோக்கிய மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்கள் 45 சதவீதமும், அழகு சாதன பொருட்கள் 45 சதவீதமும், பொம்மைகள் 44 சதவீதமும் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.இந்தாண்டு நி ர்ணயித்த இலக்கை முன்கூட்டியே எட்டியிருப்பதாக தெரிவித்துள்ள அமேசான், வரும் 2030ம் ஆண்டுக்குள் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளது.
100
இந் துாரை சேர்ந்த மிட்டாய் பிளாஸ்டிக் பொம்மைகள் தயாரிப்பாளரான கேண்டிடாய் கார்ப்பரேட், 100 கோடி ரூபாய் முதலீட்டில், பொம்மை தயாரிப்புக்கு மூன்று ஆலைகளை அமைக்க உள்ளது. இந்துாரில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைய உள்ள ஆலைகள் வாயிலாக 1,000 பேருக்கு வேலை கிடைக்கும் என தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு இந்நிறுவனம் பிளாஸ்டிக் பொம்மை ஏற்றுமதி செய்து வருகிறது.
5,40,000
அ மெரிக்காவிடம் இருந்து நம் நாட்டின் கச்சா எண்ணெய் கொள்முதல், கடந்த 2022 அக்டோபருக்கு பிறகு, மிக அதிகபட்சமாக ஒருநாளில் 5.40 லட்சம் பேரல்களாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவிடம் இருந்து சராசரி கொள்முதல் அளவு 4 லட்சம் பேரலாக இருந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் குறைக்கப்பட்டதால், அமெரிக்க கச்சா எண்ணெய் கொள்முதல் நேற்று புதிய உச்சம் தொட்டது.
51
பீ னட்பட்டர் அண்டு ஜெல்லி பிரைவேட் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை, 9 கோடி ரூபாய்க்கு பால் பொருள் தயாரிப்பு நிறுவனமான ஹெரிடேஜ் புட்ஸ் கையகப்படுத்தி உள்ளது. குறைவான கலோரி, சர்க்கரை இல்லாத மற்றும் குறைந்த கொழுப்பு சத்து கொண்ட பல்வேறு வகையான ஹெல்த் ஐஸ்கிரீம் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டுள்ள கெட்-ஏ-வே, பீனட்பட்டர் அண்டு ஜெல்லி நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். 2026, மார்ச்சில் இந்நிறுவனத்தின் மேலும் 20 சதவீத பங்குகளை வாங்க ஹெரிடேஜ் திட்டமிட்டுள்ளது.

