/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
பி.டி.,குழும இயக்குநராகிறார் சுனில் பார்தி மிட்டல்
/
பி.டி.,குழும இயக்குநராகிறார் சுனில் பார்தி மிட்டல்
பி.டி.,குழும இயக்குநராகிறார் சுனில் பார்தி மிட்டல்
பி.டி.,குழும இயக்குநராகிறார் சுனில் பார்தி மிட்டல்
ADDED : செப் 16, 2025 12:00 AM

லண்டன் : பிரிட்டனின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பி.டி., குழுமத்தின் நிர்வாகம் சாராத இயக்குநராக பார்தி என்டர்பிரைசஸ் தலைவரும், தொழிலதிபருமான சுனில் பார்தி மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்தாண்டு பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான பார்தி குளோபல், பி.டி.,குழுமத்தின் 24.50 சதவீத பங்குகளை, 34,000 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது. அப்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, சுனில் பார்தி மிட்டலுடன், பார்தி ஏர்டெல் குழுமத்தின் மேலாண் இயக்குநரான கோபால் விட்டல் ஆகியோர் இயக்குநர்களாக நியமிக்கப் பட்டு உள்ளனர்.
பிரிட்டனின் முக்கிய கட்டமைப்பு, சேவைகளை அளித்து வரும் பி.டி.,நிர்வாக குழுவில் இணைந்து, உலக தரத்திலான சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சுனில் பார்தி மிட்டல் தெரிவித்துள்ளார்.