/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
கடன் தகவல்: ஆர்.பி.ஐ., உத்தரவு
/
கடன் தகவல்: ஆர்.பி.ஐ., உத்தரவு
ADDED : பிப் 09, 2024 01:12 AM

மும்பை:கடன் வழங்குனர்கள், சில்லரை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கடன் பெறுவோருக்கு, கடன் குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை வழங்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
தனிநபர் கடன் வாங்குவோருக்கு வங்கிகளும், டிஜிட்டல் முறையில் கடன் வாங்குவோருக்கு, ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி நிறுவனங்களும், கடன் குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை வழங்க வேண்டியது அவசியம் என்பது, ஏற்கனவே உள்ள நடைமுறையாகும்.
இந்நிலையில், நேற்று நடந்து முடிந்த பணக் கொள்கை குழு கூட்டத்தில் இந்த விதிமுறையை சில்லரை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கடன்களுக்கும் நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், கடன் குறித்த தகவல்களில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடன் பெறுவோருக்கு, மொத்த வட்டி செலவு உட்பட கடன் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்குவதால், முடிவெடுப்பதில் அவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று கூறினார்.

