/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோதுமை மூட்டையுடன் இளைஞர் ராமர் கோவிலுக்கு பாதயாத்திரை
/
கோதுமை மூட்டையுடன் இளைஞர் ராமர் கோவிலுக்கு பாதயாத்திரை
கோதுமை மூட்டையுடன் இளைஞர் ராமர் கோவிலுக்கு பாதயாத்திரை
கோதுமை மூட்டையுடன் இளைஞர் ராமர் கோவிலுக்கு பாதயாத்திரை
ADDED : ஜன 05, 2026 05:28 AM

விஜயபுரா: பளகானுாரா கிராமத்தில் வசிக்கும் இளைஞர், 55 கிலோ கோதுமை மூட்டையை சுமந்தபடி, உத்தர பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோவிலுக்கு, பாதயாத்திரையாக புறப்பட்டார்.
விஜயபுரா மாவட்டம், சிந்தகி தாலுகாவின் பளகானுாரா கிராமத்தில் வசிப்பவர் கேதாரலிங்க கும்பாரா, 28.
இவர் தன் கிராமத்தின் மக்களின் நல்வாழ்வுக்காகவும், பசுவதை தடை சட்டம் கடுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்ற வேண்டுதலுடன், கால்நடையாக உத்தரபிரதேசத்தின் அயோத்தி ராமர் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு உள்ளார்.
தலை மீது 55 கிலோ கோதுமை மூட்டையை சுமந்து கொண்டு, நேற்று முன் தினம் மாலை, நடை பயணத்தை துவக்கிய அவரை, கிராமத்தினர் வாழ்த்தி வழியனுப்பினர்.
தினமும் 40 முதல் 50 கி.மீ., நடப்பார். இரவு தங்கிவிட்டு மறுநாள் மீண்டும், பாதயாத்திரையை துவக்குவார். விவேக் கும்பாரா என்பவர், கேதாரலிங்க கும்பாராவுக்கு உணவு, குடிநீர் வசதி செய்வதற்காக, பைக்கில் பின் தொடர்கிறார்.
பாதயாத்திரையை துவக்குவதற்கு முன், தினமும் மாலை பளகானுாரில் இருந்து கோரள்ளி கிராமம் வரை, கோதுமை மூட்டையை சுமந்து கொண்டு பல நாட்கள் பயிற்சி பெற்றார்.
இதற்கு முன் ஆந்திராவின், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன கோவிலுக்கு, இது போன்று மூட்டையை சுமந்து, 12 நாட்கள் கேதாரலிங்க கும்பாரா, பாதயாத்திரையாக சென்றார்.

