sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆண்டுகளுக்கு முந்தைய துர்கை அம்மன்

 ஆண்டுகளுக்கு முந்தைய துர்கை அம்மன்

 ஆண்டுகளுக்கு முந்தைய துர்கை அம்மன்


ADDED : ஜன 13, 2026 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 04:54 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியின் பூஞ்சா கிராமத்தில் உள்ளது ஸ்ரீ பஞ்ச துர்கா பரமேஸ்வரி கோவில். இக்கோவில் உள்ள பகுதி, ஒரு காலத்தில் அடர்ந்த வனமாக இருந்தது. இங்கு துறவிகளும், ரிஷிகளும் தவம் செய்தனர். இக்கோவில், 800 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.

பஞ்ச துர்கா பரமேஸ்வரி கோவில் என்பது துர்கா தேவியின் ஷைலபுத்ரி, பிரம்மச்சாரிணி, சந்திரகாந்தா, கூஷ்மந்தா, ஸ்கந்தமாதா ஆகிய பஞ்ச வடிவங்களை குறிக்கிறது. கருவறையில் துர்கையின் வடிவத்தை பார்த்தால் மெய்சிலிர்க்கிறது. புராண கதைகளை சித்தரிக்கும் வகையில், சிற்பங்கள் ராஜகோபுரத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

துர்கா தேவி கருவறையை சுற்றி விசாலமான பிரகாரம் அமைந்து உள்ளது. கோவிலில் பெரிய முற்றம், துாண்கள் கொண்ட மண்டபங்கள், தெப்பகுளம் அமைந்து உள்ளது.

கோவிலுக்குள் துர்கா பரமேஸ்வரி தேவி மூலவர், கல்லால் செய்யப்பட்டு உள்ளது. கோவில் வளாகத்தில் ஹனுமன் உட்பட மற்ற தெய்வங்களின் சன்னிதிகளும் உள்ளன. அம்மனை தரிசிக்க, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

எப்படி செல்வது?

 பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து, 48 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.  ரயிலில் செல்வோர், பன்ட்வால் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து, 21 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு ஆட்டோ, டாக்சியில் செல்லலாம்.  பஸ்சில் செல்வோர், வேனுார் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு டாக்சியில் செல்லலாம்.  கோவில் திறப்பு: காலை 6:30 முதல் மதியம் 12:00 மணி வரை மற்றும் மாலை 5:30 முதல் இரவு 7:00 மணி வரை.  திருவிழா: நவராத்திரி, தேர் மஹோத்சவம்  அழைப்புக்கு: 97419 69279



- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us