sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு ஐ.டி., ஊழியர்களுக்கு மீண்டும் 'ஒர்க் பிரம் ஹோம்?'

 பெங்களூரு ஐ.டி., ஊழியர்களுக்கு மீண்டும் 'ஒர்க் பிரம் ஹோம்?'

 பெங்களூரு ஐ.டி., ஊழியர்களுக்கு மீண்டும் 'ஒர்க் பிரம் ஹோம்?'


ADDED : ஜன 30, 2026 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 06:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு மீண்டும் வாரத்தில் ஒரு நாள் 'ஒர்க் பிரம் ஹோம்' திட்டத்தை செயல்படுத்த, போக்குவரத்து துறை ஆலோசித்து வருகிறது.

இந்தியாவில் தொழில்நுட்ப நகரமான பெங்களூருக்கு நாட்டின் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் வருகை தருகின்றனர். இதனால் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

கடந்தாண்டு கூட உத்தர பிரதேசத்தை சேர்ந்த எம்.பி., ஒருவர், பெங்களூரின் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது தொடர்பாக, தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவேற்றியிருந்தார். சமீபத்தில் நெதர்லாந்தை சேர்ந்த 'டாம் டாம்' என்ற நிறுவனம் நடத்திய போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரம் பட்டியலில், 'பெங்களூரில் 10 கி.மீ., துாரம் செல்ல, 36 நிமிடம் 9 விநாடிகள் ஆகிறது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்களில் பெங்களூரு உலகளவில் இரண்டாவது இடத்தை பிடித்து உள்ளது' என்று குறிப்பிட்டு உள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, போக்குவரத்து போலீசார் புதிய யோசனையை கண்டுபிடித்து உள்ளனர். போக்குவரத்து இணை கமிஷனர், பிப்ரவரி முதல் வாரத்தில் தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்ப நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.

 நிறுவனங்களில் 500 பேருக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தால், வாகனங்கள் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு

 வாகன போக்குவரத்தை குறைப்பதால் நெரிசல் குறையும்

 ஐ.டி., ஊழியர்களுக்கு, வாரத்தில் ஒரு நாள் 'ஒர்க் பிரம் ஹோம்' திட்டம்

 ஒரே காரில் பல நிறுவன ஊழியர்கள் பயணித்தல்

 அரசு பஸ்களில் பயணித்தல்

 10 சதவீத வாகன போக்குவரத்தை குறைத்தாலே, 40 சதவீத நெரிசல் குறையும் வாய்ப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us