தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விதவை தற்கொலை: ஏட்டு மீது வழக்கு

 விதவை தற்கொலை: ஏட்டு மீது வழக்கு

 விதவை தற்கொலை: ஏட்டு மீது வழக்கு


ADDED : பிப் 22, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: விதவைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், போலீஸ் ஏட்டு மீது வழக்கு பதிவாகியுள்ளது.

ஷிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா, சித்தாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சுவாதி. இவரின் கணவர் ஜெகதீஷ். கே.எஸ்.ஆர்.பி., போலீசில் ஏட்டாக பணியாற்றி வந்தார். குடிக்கு அடிமையான ஜெகதீஷ், சமீபத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த இரு நாட்களுக்கு முன், ஜெகதீஷின் மனைவி சுவாதியும் தற்கொலை செய்தார். முன்னதாக வாட்ஸ் ஆப்பில், தன் தாயாருக்கு மரண குறிப்பு ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில், 'மாலுார் போலீஸ் ஏட்டு மோகன், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். முகநுாலில் என்னை பற்றி தவறான தகவல் பரப்பினார். ஏற்கனவே கணவரை இழந்து விட்டேன். மோகனை சும்மா விடாதீர்கள். என் குழந்தைகளை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்' என்று கூறியிருந்தார்.

சுவாதியின் தாயார், நியூடவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, ஏட்டு மோகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தலைமறைவான அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us