/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் சிவகுமார் பீஹாருக்கு பயணம் ஏன்?
/
தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் சிவகுமார் பீஹாருக்கு பயணம் ஏன்?
தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் சிவகுமார் பீஹாருக்கு பயணம் ஏன்?
தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் சிவகுமார் பீஹாருக்கு பயணம் ஏன்?
UPDATED : ஆக 25, 2025 04:23 AM
ADDED : ஆக 25, 2025 04:21 AM

பெங்களூரு: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் நடக்கும் நடை பயணத்தில் பங்கேற்க, கர்நாடகாவின் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன், துணை முதல்வர் சிவகுமார் பீஹார் சென்றுள்ளார். தன் சக்தியை காட்ட, இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தியுள்ளார்.
கர்நாடகாவில் சில மாதங்களாக, முதல்வர் பதவி குறித்து சர்ச்சை நடந்தது. நடப்பாண்டு இறுதியில் முதல்வர் மாற்றம் நிகழும். சிவகுமார் முதல்வராவார் என, சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கூறி வந்தனர்.
முற்றுப்புள்ளி முதல்வர் சித்தராமையா ஆதரவாளர்கள் இதை மறுத்தனர். ஆட்சி காலம் முழுதும், அவரே முதல்வராக இருப்பார் என, கருத்து தெரிவித்தனர். கர்நாடகாவில், இரண்டு அரசு உள்ளதோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் மேலிடமும், முதல்வரை மாற்ற ஆலோசித்ததாக தகவல் வெளியானது.
அதன்பின் முதல்வர் சித்தராமையா, டில்லிக்கு சென்று முதல்வர் மாற்றம் சர்ச்சைக்கு, தற்காலிக முற்றுப்புள்ளி வைத்திருந்தார். ஆட்சி முழுவதும், நானே முதல்வராக இருப்பேன். இதை மேலிடம் தெளிவுபடுத்தியதாக கூறினார்.
தனக்கு அதிகமான எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது. சிவகுமாருக்கு இல்லை என, மறைமுகமாக சுட்டி காட்டினார்.
முதல்வரின் பேச்சு, துணை முதல்வர் சிவகுமாரை சீண்டியுள்ளது. தனக்கும் எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது என்பதை, மேலிடத்துக்கு உணர்த்த சரியான நேரம் எதிர்பார்த்து காத்திருந்தார்.
நோக்கம் இந்நிலையில் லோக்சபா தேர்தலில், ஓட்டுகளை திருடி, பா.ஜ., வெற்றி பெற்றதாக, குற்றம்சாட்டிய ராகுல், இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பீஹாரில் நடை பயணம் நடத்துகிறார்.
இதில் பங்கேற்க, துணை முதல்வர் சிவகுமார், சிறப்பு விமானத்தில் பீஹார் சென்றுள்ளார், தன்னுடன் காங்கிரசின் 10 எம்.எல்.ஏ.,க்களையும் அழைத்து சென்றுள்ளார். தன் சக்தியை காட்டி, ராகுலை கவருவது, தனக்கும் போதுமான எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது என்பதை காட்டுவது, சிவகுமாரின் நோக்கமாகும்.
சீனீவாஸ் மானே, பாபா சாஹேப் பாட்டீல், ராஜு சேட், நாகராஜ், ரிஸ்வான் அர்ஷத், நயனா மோட்டம்மா, அசோக் பட்டன், ஆனந்த் கடூர், வேணுகோபால் நாயக், சீனிவாஸ், பசனகவுடா பாதர்லி, தேசிய இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சீனிவாச கவுடா, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மஞ்சுநாத கவுடா உட்பட, பலர் சிவகுமாருடன் சென்றுள்ளனர்.