sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குடிநீர் வழங்கல் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

 குடிநீர் வழங்கல் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

 குடிநீர் வழங்கல் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்


ADDED : ஏப் 19, 2026 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 02:49 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவனஹள்ளி: ''நகராட்சி நிர்வாக வரம்புக்குள் வரும் குடிநீர் வழங்கல் பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,'' என, கர்நாடக மாநில குடிநீர் வழங்கல் துறை பணியாளர் சங்கத்தின் தலைவர் புருஷோத்தம் கூறினார்.

குடிநீர் வழங்கல் துறை பெங்களூரு கிராமப்புற மாவட்ட பணியாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கவுரவ தலைவராக பிரசன்னா, தலைவராக பானுபிரகாஷ், துணைத் தலைவராக ஆனந்த், செயலராக ஹரீஷ், பொருளாளராக வினோத், உறுப்பினர்களாக வெங்கடேஷ், சிவகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கர்நாடக மாநில குடிநீர் வழங்கல் துறை பணியாளர் சங்கத்தின் தலைவர் புருஷோத்தம் பேசியதாவது:

பொதுமக்களுக்கு தண்ணீர் பிரச்னை ஏற்படாமல் இருக்க பணி செய்து வருகிறோம். இதை சில மேலதிகாரிகள் தங்களின் சாதனையாக பயன்படுத்திக் கொண்டு, எங்களை பணி நிரந்தரம் செய்யாமல் அலட்சியம் காட்டுகின்றனர். எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தும் அமல்படுத்தவில்லை. இதை கண்டித்து மாநிலம் முழுதும் போராட்டம் நடத்த தயாராகி வருகிறோம். மாநிலத்தில் 5,600-க்கும் மேற்பட்ட குடிநீர் வழங்கல் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 1998 முதல் யாரையும் நிரந்தர ஊழியர்களாக ஆக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ெஹாஸ்கோட் நகராட்சி, தேவனஹள்ளி விஜயபுரம் பேரூராட்சி, தொட்டபல்லாப்பூர், நெலமங்களா நகராட்சி பகுதிகளில் பணிபுரியும் பணியாளர்களின் பிரச்னைகளை தீர்க்க மாவட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தலைவர் பானுபிரகாஷ் தெரிவித்தார்.

மாநில தலைவர்கள் சுரே ஷ்குமார், கிரண்குமார், பிரசன்னகுமார் மற்றும் பலர் பங்கேற் றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us