sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அடுத்த கல்வியாண்டு முதல் போக்குவரத்து விதிகள் பாடம்

அடுத்த கல்வியாண்டு முதல் போக்குவரத்து விதிகள் பாடம்

அடுத்த கல்வியாண்டு முதல் போக்குவரத்து விதிகள் பாடம்


ADDED : ஜூன் 08, 2025 10:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2025 10:49 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு : போக்குவரத்து போலீஸ் துறை தயாரித்த சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிகள் குறித்த சிறப்பு பாடம், அடுத்த கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்படும் என, கர்நாடக பாடநுால் கழகம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் பள்ளி மாணவர்களிடம் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, போக்குவரத்து போலீஸ் ஒரு சிறப்பு பாடத்தை தயாரித்தது. இதை, மாணவர்களின் பாடப்புத்தகங்களில் சேர்க்கும்படி, பள்ளி கல்வி ஆராய்ச்சி துறையிடம் கோரிக்கையை வைத்தது. இந்த கோரிக்கை கர்நாடக பாடநுால் கழகத்திற்கு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து, கர்நாடக பாடநுால் கழகம் வெளியிட்ட அறிக்கை:

நடப்பு கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுவிட்டது. அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்களில், போக்குவரத்து விதிகள், சாலை பாதுகாப்பு குறித்த கட்டாயம் பாடங்கள் சேர்க்கப்படும்.

ஏற்கனவே, 2ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில், சாலை பாதுகாப்புகள் குறித்த தலைப்புகள் இணைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், போக்குவரத்து போலீஸ் துறையால் தயாரிக்கப்பட்ட, சிறப்பு பாடத்தை அடுத்த கல்வியாண்டில் சேர்ப்போம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us