/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போக்குவரத்து அபராதம் சலுகை மைசூரில் ரூ.11 கோடி வசூல்
/
போக்குவரத்து அபராதம் சலுகை மைசூரில் ரூ.11 கோடி வசூல்
போக்குவரத்து அபராதம் சலுகை மைசூரில் ரூ.11 கோடி வசூல்
போக்குவரத்து அபராதம் சலுகை மைசூரில் ரூ.11 கோடி வசூல்
ADDED : டிச 12, 2025 06:50 AM
மைசூரு: போக்குவரத்து விதிமீறல் அபராதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டதால், டிச., 9ம் தேதி வரை மைசூரில் 11 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் அபராதம் அதிகமாக இருந்ததாலும், நிதி பற்றாக்குறையால் கட்ட முடியாதவர்களுக்காக, நவ., 21 முதல் டிச., 12 ம் தேதி வரை 50 சதவீதம் தள்ளுபடி சலுகையை, மாநில போக்குவரத்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.
மைசூரு மாவட்டத்தில் நவ., 21 முதல் டிச., 9ம் தேதி வரை 5,15,953 வழக்குகளை முடித்து வைத்த போலீசார், 11,76,81,953 ரூபாய் வரை அபராதம் வசூலித்து உள்ளனர்.
இன்று கடைசி நாள் என்பதால், அபராதம் செலுத்ததாதவர்கள் இதை பயன்படுத்தி கொள்ளும்படியும், நாளை முதல் முழு தொகையும் செலுத்த வேண்டி வரும் என்று போக்குவரத்து போலீசார், பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ள னர்.