/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹெல்மெட் அணியவில்லை என டிராக்டர் ஓட்டியவருக்கு அபராதம்
/
ஹெல்மெட் அணியவில்லை என டிராக்டர் ஓட்டியவருக்கு அபராதம்
ஹெல்மெட் அணியவில்லை என டிராக்டர் ஓட்டியவருக்கு அபராதம்
ஹெல்மெட் அணியவில்லை என டிராக்டர் ஓட்டியவருக்கு அபராதம்
ADDED : ஏப் 09, 2025 07:12 AM

மைசூரு: 'ஏஐ'யின் அக்கப்போர் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மைசூரில் டிராக்டர் ஓட்டியவர், ஹெல்மெட் அணியவில்லை என்றும், 500 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றும் குறுந்தகவல் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
மைசூரு - பெங்களூரு விரைவு சாலையில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
சாலை விதிகளை மீறுவோரை கண்டறிய 'ஏஐ' என்ற செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஆனால் ஏஐயால் சில நேரம் குழப்பமும் ஏற்படுகின்றன.
காரில் பயணம் செய்வோர் சீட் பெட் அணிந்து சென்றாலும், கார் ஓட்டுபவர் ஆடை, சீட் பெல்ட் நிறத்தால் குழப்பம் ஏற்படுகிறது. சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்தாலும், சீட் பெல்ட் அணியவில்லை என்று சம்பந்தப்பட்டோருக்கு, போக்குவரத்து போலீஸ் துறையிடம் இருந்து குறுந்தகவல் செல்கிறது.
தற்போது ஏற்பட்டுள்ள குழப்பம் மிகவும் விசித்திரமானது. மைசூரு நகரை சேர்ந்தவர் மதிரியா கிஷோர் பிட்டப்பா. இவரின் மொபைல் போனுக்கு, நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போக்குவரத்து தானியங்கி மையத்தில் இருந்து குறுந்தகவல் வந்துள்ளது.
அதில், 'நீங்கள் வண்டி ஓட்டும்போது, ஹெல்மெட் அணியவில்லை. 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில், இவர் ஓட்டியது டிராக்டர்; அத்துடன் சாலையில் செல்லவில்லை.
யாரும் ஓட்டியதில்லை
இதுகுறித்து அவர் கூறியதாவது:
என் பண்ணையில் மட்டும் எப்போதாவது டிராக்டர் ஓட்டுவேன். சாலைகளுக்கு எடுத்துச் சென்றதில்லை. வாகனத்தின் நிறுவன ஊழியர்களே இங்கு வந்து தான் பழுது நீக்குவர். நானோ, என் பண்ணையில் பணியாற்றுபவர்களோ பிரதான சாலையில் டிராக்டர் ஓட்டியதில்லை.
போலீஸ் அனுப்பிய வாகன பதிவு எண்ணில் 'டி' என்று குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு இருந்தால் அது 'டிராக்டர்' என்று தான் அர்த்தம். இதை இரு சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்துவதில்லை. 'ஏஐ'யால் இரு சக்கர வாகனத்தையும், டிராக்டரையும் வித்தியாசப்படுத்தி பார்க்க முடியவில்லை.
இப்படி இல்லாதபோது, அதை 'நுண்ணறிவு' என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஒருவேளை யாரோ, என் டிராக்டர் எண்ணை, இரு சக்கர வாகனத்திற்கு பயன்படுத்தி, முறைகேடு செய்திருக்கலாம். போலீசார் விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒரு பக்கம் நன்மை இருந்தாலும், மற்றொரு பக்கம் சில பாதகங்களும் நடக்கத்தான் செய்கின்றன.

