sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'இருவருக்கிடையே கருத்து வேறுபாடே இல்லை'

 'இருவருக்கிடையே கருத்து வேறுபாடே இல்லை'

 'இருவருக்கிடையே கருத்து வேறுபாடே இல்லை'


ADDED : நவ 30, 2025 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 04:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ரகசிய பேச்சுக்கு பின், சித்தராமையா கூறியதாவது:

மேலிட உத்தரவுப்படி, சிவகுமாரை சிற்றுண்டிக்கு அழைத்து பேசினேன். அவர் மதிய விருந்துக்கு வரும்படி, அவரது வீட்டிற்கு அழைத்தார். மற்றொரு நாள் வருவதாக கூறினேன். மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று இருவரும் தீர்மானித்துள்ளோம்.

டிசம்பர் 8 முதல், சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், எந்த குழப்பமும் இருக்கக் கூடாது. நாளை முதல் எந்த குழப்பமும் இருக்காது. எங்களுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து, மேலிடத்துக்கு தெரிவிக்கப்படும்.

சில ஊடகங்கள் அதிகாரப் பகிர்வு விஷயத்தை உருவாக்கியுள்ளன. அமைச்சரவை மாற்றம் தொடர்பாக சில எம்.எல்.ஏ.,க்கள் டில்லி சென்றிருக்கலாம் என்று கருதுகிறேன். இதை வேறு விதமாக விளக்க வேண்டிய அவசியமில்லை.

சமீப நாட்களில் சில தேவையற்ற குழப்பங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து நாங்கள் பேசியுள்ளோம். 2028 சட்டசபை தேர்தல், உள்ளாட்சி, மாநகராட்சி, தாலுகா, மாவட்டம் மற்றும் கிராம பஞ்சாயத்து தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை. இதில் வெற்றி பெறுவது முக்கியம் என்பதால், இதை பற்றி நாங்கள் விவாதித்தோம். 2028-ல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். 2023 சட்டசபை தேர்தலில் நாங்கள் பணியாற்றியது போலவே ஒன்றாக பணியாற்ற முடிவு செய்துள்ளோம்.

எங்களுக்கு எந்த விதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை. இப்போது இல்லை, எதிர்காலத்திலும் இருக்காது. கடந்த காலங்களில், எதிர்க்கட்சிகளை நாங்கள் திறம்பட எதிர்கொண்டோம். தொடர்ந்து எதிர்கொள்வோம்.

பா.ஜ., - ம.ஜ.த.,வினர் பொய் குற்றச்சாட்டுகள் கூறுவது வழக்கம். நானும், துணை முதல்வரும் அவர்களை திறம்பட எதிர்கொள்வோம். அதற்கு தேவையான உத்திகளை நாங்கள் வகுத்துள்ளோம்.

எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக செய்தித்தாள்களில் கூறியுள்ளனர். இது சாத்தியமில்லை, எங்களிடம் 142 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். பா.ஜ.,வினரிடம் 64 பேரும்; ம.ஜ.த.,வினரிடம் 18 பேர் மட்டுமே உள்ளனர். இருவரையும் சேர்த்தால், 82 பேர் மட்டுமே இருக்கின்றனர். அவர்களின் முயற்சி தோல்வியடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

'இருவரும் ஒன்றாக பணியாற்றுவோம்' ரகசிய பேச்சுக்கு பின் சிவகுமார் கூறியதாவது: முதல்வர் என்ற தலைமைத்துவ பிரச்னையில், என் அரசியல் நிலைப்பாடும் முதல்வர் சித்தராமையாவின் அரசியல் நிலைப்பாடும் ஒன்றுதான். கட்சி மேலிடம் அறிவுறுத்தியபடி நாங்கள் செயல்படுவோம். நாங்கள் கட்சிக்கு விசுவாசமான தொண்டர்கள். தற்போதைய சூழ்நிலையில், கட்சி தேசிய அளவில் ஒரு கடினமான காலகட்டத்தை கடந்து வருகிறது. 2028 சட்டசபை தேர்தலுக்கு பின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் தலைமையில் 2029 லோக்சபா தேர்தலை எதிர்கொள்வோம். வரும் 2028ம் ஆண்டு மாநிலத்திலும், 2029ம் ஆண்டு தேசிய அளவிலும் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதே எங்கள் குறிக்கோள். நாங்கள் நீண்ட காலமாக ஒன்றாக வேலை செய்து வருகிறோம். அதே வழியில் தொடர்ந்து பணியாற்ற ஒரு உறுதியான முடிவை எடுத்துள்ளோம். தொண்டர்களின் கடின உழைப்பு, மக்களின் ஆசீர்வாதம் மற்றும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பால் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. நாங்கள் வாக்குறுதியளித்தபடி மக்களுக்கு சேவை செய்கிறோம். மாநில மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பு, நம்பிக்கைபடி செயல்படுவது எங்கள் கடமை. டிசம்பர் 8 முதல் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும். எதிர்க்கட்சிகளின் தந்திரங்களுக்கு பதிலடி கொடுப்பது குறித்த உத்திகளை வகுப்பது குறித்து விவாதித்தோம். அவையில் அவர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் நாங்கள் பதிலளிக்கும் திறன் கொண்டவர்கள். எங்களுக்குள் எந்த அணியும் இல்லை. முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் காலத்தில் கூட, எந்த அணியும் இல்லை. எனக்கு ஒரே ஒரு அணி தான் உள்ளது. அதுதான் காங்கிரஸ் அணி. சித்தராமையா, தன், முதல் பதவிக்காலத்தில், முதல் ஆறு மாதங்களுக்கு என்னை அமைச்சராக்காத போதும், நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என்ற என் முடிவு அசைக்க முடியாதது. நாங்கள் இருவரும் ஒன்றாக வேலை செய்வோம். அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்வது, ஒவ்வொரு எம்.எல்.ஏ.விற்கும் அதிகாரம் அளிப்பது மற்றும் கட்சியை வலுவாக ஒழுங்கமைப்பது எங்கள் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us