/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் நாளை நடக்கிறது திருக்கல்யாணம்..
/
காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் நாளை நடக்கிறது திருக்கல்யாணம்..
காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் நாளை நடக்கிறது திருக்கல்யாணம்..
காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் நாளை நடக்கிறது திருக்கல்யாணம்..
ADDED : ஏப் 10, 2025 05:12 AM

சிவாஜிநகர்: சிவாஜிநகரில் உள்ள காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் நாளை சிவன் - பார்வதிக்கு திருக்கல்யாண உத்சவம் நடக்கிறது.
பெங்களூரு, சிவாஜிநகர் திம்மையா சாலையில், காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நாளை மாலை 6:00 முதல் இரவு 8:30 மணிக்குள் சிவன் - பார்வதிக்கு திருக்கல்யாணம் உத்சவம் நடக்கிறது.
கடவுளை நமது குடும்ப பிள்ளை போல பாவித்து, மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயதார்த்தம், மாலை மாற்றுதல், ஊஞ்சல் ஆடுதல், வேள்வி செய்வித்தல், மங்களநாண் அணிவித்தல் என்று, நம் வீட்டு திருமணம் போன்று நடத்துவதே திருக்கல்யாண உற்சவத்தின் சிறப்பு அம்சம்.
கல்யாணம் என்ற வார்த்தையே புத்துணர்ச்சி தர கூடிய சொல். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மனதில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும். நேர்மறையாக எண்ணங்களை நமக்குள் கொண்டு வரும்.
எல்லா தமிழ் மாதத்திலும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவதால் திருமண தடை நீங்கும்.
வேலை, குடும்ப பிரச்னை தீரும். வாழ்க்கை புத்துணர்ச்சி பெறும். கடவுளுக்கு நடக்கும் திருக்கல்யாணத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு, இறையருள் பெறுமாறு கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

