/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிவகுமார் ஓட்டிய ஸ்கூட்டர் ரூ.18,500 அபராதம் பாக்கி
/
சிவகுமார் ஓட்டிய ஸ்கூட்டர் ரூ.18,500 அபராதம் பாக்கி
சிவகுமார் ஓட்டிய ஸ்கூட்டர் ரூ.18,500 அபராதம் பாக்கி
சிவகுமார் ஓட்டிய ஸ்கூட்டர் ரூ.18,500 அபராதம் பாக்கி
ADDED : ஆக 07, 2025 09:44 AM

பெங்களூரு,: ஹெப்பால் மேம்பாலத்தை ஆய்வு செய்ய, துணை முதல்வர் சிவகுமார் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்துக்கு போக்குவரத்து விதிமீறலுக்காக போலீசார் 18,500 ரூபாய் அபராதம் விதித்திருப்பது, தற்போது தெரிய வந்துள்ளது.
பெங்களூரின், ஹெப்பால் சந்திப்பில், புதிதாக மேம்பாலம் கட்டப்படுகிறது. இதை ஆய்வு செய்வதற்காக, துணை முதல்வர் சிவகுமார், அதி காரிகளுடன், நேற்று முன் தினம் சென்றிருந்தார். அப்போது நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் பைரதி சுரேஷுடன், 'டியோ' ஸ்கூட்டரில் ஒரு சுற்று வந்தார்.
ஸ்கூட்டரை ஓட்டியபோது, சிவகுமார் ஹெல்மெட், கறுப்பு நிற கண்ணாடி அணிந்திருந்தார். ஆனால் அவர் அணிந்திருந்த ஹெல்மெட், ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாதது. அவருக்கு பின்னால் மற்றொரு ஸ்கூட்டரில் மேம்பாலத்தில் சென்ற, சாந்திநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸ், ஹெல்மெட்டே அணிந்திருக்கவில்லை.
துணை முதல்வர் சிவகுமார் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர், காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கு சொந்தமானது.
'கேஏஒ4 ஜெ2087 என்ற பதிவு எண் கொண்ட அந்த ஸ்கூட்டரின் உரிமையாளர், பல முறை போக்குவரத்து விதிகளை மீறியுள்ளார். ஹெல்மெட் இல்லாமல் பயணம், சிக்னல் ஜம்ப் உட்பட, பல விதிகளை மீறியது, தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
இதற்கு முன்பும், இந்த ஸ்கூட் டர் விதிகளை மீறுவது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. அவருக்கு நோட்டீஸ் அனுப்பியும், அபராதம் செலுத்தவில்லை. மொத்தம் 18,500 ரூபாய் அபராதம் பாக்கி வைத் திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

