/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
3 நாள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடுகிறது சட்டசபை
/
3 நாள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடுகிறது சட்டசபை
3 நாள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடுகிறது சட்டசபை
3 நாள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடுகிறது சட்டசபை
ADDED : ஜன 27, 2026 04:58 AM

பெங்களூரு: மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின், சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.
கர்நாடக சட்டசபையின் இந்த ஆண்டிற்காக முதல் கூட்டத்தொடர் கடந்த, 22 ம் தேதி துவங்கியது. அரசு எழுதிக் கொடுத்த உரையை வாசிக்க மறுத்து, கவர்னர் தாவர்சந்த் கெலாட் வெளிநடப்பு செய்தார். அவரை பின்தொடர்ந்து சென்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. மறுநாள் இதுகுறித்து சபையில் விவாதம் நடந்தது.
இந்நிலையில், வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் நேற்று குடியரசு தினம் என, மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது. மூன்று நாட்களுக்கு பின், சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.
நரேகா திட்டத்தின் பெயரை, ஜி ராம் ஜி என்று மத்திய அரசு மாற்றம் செய்தது பற்றி சட்டசபையில் விவாதிக்க அரசு முடிவு செய்திருந்தது. ஆனால், முதல் இரண்டு நாட்கள் நடந்த கூட்டத்தில், அதுபற்றி விவாதம் நடக்கவே இல்லை.
இன்று விவாதம் நடத்த ஆளுங்கட்சி முடிவு செய்து உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் விடுவதாக தெரியவில்லை. கலால் துறையில் லஞ்சம் கேட்டதாக சிக்கலில் உள்ள அமைச்சர் திம்மாபூர் ராஜினாமா செய்ய வேண்டும், பா.ஜ., - எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது உட்பட பல பிரச்னைகளை முன்னெடுத்து விவாதிக்க, எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.
இதனால், இன்றைய கூட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என, எதிர்பார்க்கப் படுகிறது.

